விழுப்புரம், பிப்.24- வீடுர் கிராம மக்க ளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கிடைக்கும் வரைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் ஓயாது என்று மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயி லம் ஒன்றியத்தில் உள்ள வீடூர் கிராமத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளை துவக்க விழா, அரசியல் விளக்க பொதுக் கூட்டம் செயலாளர் பி.மூவே ந்தன் தலைமையில் நடை பெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செய ற்குழு உறுப்பினர் பி.குமார், ஜி.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் டி.கெஜ மூர்த்தி ஆகியோர் செங்கொடியின் வரலாறு, மக்களுக்கான போராட்டம், களப்பணி, தற் போதைய அரசியல் நிலைப் பாடுகள் குறித்து பேசினர். ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எம்.பழனி, கே.கோ விந்தசாமி, எம்.மணி, எஸ்.காளிதாஸ், ஆர்.ஏழு மலை, என் அழகு சீலன், ஆர். கோவிந்தராஜ் வீடூர் கிளை உறுப்பினர்கள் பி.செல்ல துரை, பி.மணிகண்டன், எம்.சங்கர், எஸ்.வீர செல்வம், பெண்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் உரையாற் றிய மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், வீடூர் கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. 100 நாள் வேலையும் முறையாக கொடுப்பதில்லை. இந்த கோரிக்கைகளை வென்றெ டுக்கும் வரை கிராம மக்களுடன் செங்கொடி இயக்கம் போராடும் என்றார்.