tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வேலூர், விழுப்புரத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு 

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து, பொது மக்களுக்கு மலிவு விலை யில் மருந்துகள் விற்ப னையை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 22 மருந்தகங்கள் தொடங்கப்பட்டது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப. கார்த்திகேயன், வி.அமுலு விஜயன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் விழுப்புரம் அருகே சாலை அகரத்தில் திங்கட்கிழமை (பிப்.24) முதல்வர் மருந்தகத்தை குத்து விளக்கேற்றி அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மாவட்ட ஆட்சியர் தனஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இலட்சுமணன், அ.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைவரும் பாராட்டும் வகையில் பட்ஜெட்

: அமைச்சர் தகவல் கடலூர்,பிப்.24- அனைவரும் பாராட்டுகின்ற வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும் என்று குறிஞ்சிப்பாடியில் வேளாண்  உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (பிப்.24) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் நடத்தப்படும் 13 சங்கங்கள் மற்றும் 23 தொழில் முனைவோர் சார்பில் முதல்வர் மருந்தகங்கள் துவக்கி வைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆகி யோர் முதல்வர் மருந்தகத்தின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரக்கூடிய ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வேளாண் பட்ஜெட் அமையும் எனவும், தவழும் வகையில் இருந்த வேளாண் பட்ஜெட் தற்பொழுது எழுந்து நடக்க கூடிய நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.