ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோயில்பதாகை, மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் ரூ.5.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் ஆவடி மேயர் கு.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் எஸ்.கந்தசாமி, மாநகரப் பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், மண்டல குழுத்தலைவர்கள் ஜி.ராஜேந்திரன், அமுதா சேகர், என்.ஜோதிலெட்சுமி, வி.அம்மு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.