tamilnadu

img

வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான எச்சரிக்கை... தமிழ்நாடு அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கை!

வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று மதுரையில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை மழை நீர் வடிகாலை மறுசீரமைக்கும் வேலை அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டமிடல் மற்றும் கண்காணிப்புடன் கூடிய பணிகள் நடைபெற்றுள்ளன. அதற்கான நல்ல விளைவுகளும் உருவாக்கியுள்ளது.

ஆனால் மதுரையில் அப்படிச் சொல்வதற்கில்லை. நீர் போக்கு வழித்தடங்களை கண்டறிந்து அவற்றின் இடையூறுகளை சரி செய்துநிலத்துக்கடியில் குழாய் பதித்துலிப்ட் ஸ்டேஷன்கள் உருவாக்கி மழைநீரை கையாளத் திறன்கொண்ட நகரமைப்பை உருவாக்க வேண்டும். மதுரைக்கு வரும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை நபர் சார்ந்து இருப்பதைவிட நகரம் சார்ந்து இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.