நேபாளத்தின் காத்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் மாவட்டங்களில் செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் நீட்டித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, ராணுவ காட்சி அமலுக்கு வந்தது. இந்த சூழலில், வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு, லலித்பூர் மற்றும் பக்தபூர் மாவட்டங்களில் செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் நீட்டித்துள்ளது.
அத்தியாவசிய சேவை வாகனங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றாடப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றும், மக்கள் சிறிய குழுக்களாக கடைகளுக்கு செல்லும்படி நேபாள ராணுவம் உத்தரவிட்டுள்ளது.