அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் உட்டா வேலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுடப்பட்டார். கழுத்தில் காயமடைந்த சார்லி கிர்க்கை அங்கிருந்தவர்கள் உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் அழைத்து சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொலையாளியை தேடும் பணியில் அந்நாட்டு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க டிரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார் சார்லி. இவர், கருக்கலைப்புக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.