மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பை ஆச்சார்யா தேவராட் கூடுதலாக கவனிப்பார் என குடியரசு மாளிகை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி. ராதா கிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகியுள்ளதால் குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவராட், மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.