நிவாரணம் கேட்டதோ ரூ.20,000 கோடி ; அறிவிக்கப்பட்டதோ ரூ.1,600 கோடி
பஞ்சாப் மக்களை அவமதித்த மோடி அரசு
சண்டிகர் 37 ஆண்டுகாலம் இல்லாத அள வில் அதீத கனமழையால் விவசாய செழிப்பு மிகுந்த பூமியான பஞ்சாப் மாநிலம் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகிறது. இந்த கனமழை வெள் ளத்தில் சிக்கி குருதாஸ்பூர் மாவட் டம் 80% அளவில் உருக்குலைந்த நிலையில், மேலும் 16 மாவட்டங் கள் முற்றிலும் இயல்புநிலை இழந்து காணப்படுகின்றன. வெள்ளப் பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் இதுவரை உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் 1.91 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை அன்று வான் வழி ஆய்வு மேற்கொண்டு, குரு தாஸ்பூரில் நடைபெற்றக் கூட்டத் திற்கு பிறகு ரூ.1,600 கோடி நிவார ணத் தொகையை அறிவித்தார். ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு, ஒன்றிய அரசிடமி ருந்து ரூ.20,000 கோடி நிவாரணத் தொகையை கோரியது. ஆனால் வெறும் ரூ.1,600 கோடி நிவாரணத் தொகை “குப்பை” தான் தவிர வேறு எதுவும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக “தி வயர்” செய்தியாளரிடம் ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில செய்தித் தொடர்பா ளர் நீல் கார்க் கூறுகையில், “பஞ்சாப் மாநிலம் பிரதமர் மோடியி டம் அதிக நம்பிக்கை வைத்திருந் தது. ஆனால் அவர் நீதி வழங்கத் தவறிவிட்டார். கடந்த 2 வாரங்க ளாக கனமழை வெள்ளம் பஞ்சாப் பில் ஏற்படுத்திய அழிவை வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. அதனால் மோடி அறிவித்த ரூ.1,600 கோடி போதுமானதல்ல. இது பஞ்சாப்பை ஏளனம் செய்வ தற்கு சமம். பஞ்சாப் எப்போதும் தேசத்தை ஊட்டி (விவசாயம் - உணவு), எல்லைகளை (இந்தியா - பாகிஸ்தான் எல்லை) பாதுகாத்து வருகிறது. ஆனால் மோடி அரசு குப்பையை போன்ற தொகையை அலட்சியம் செய்துள்ளது” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். புகைப்படம் எடுப்பதிலேயே ஆர்வம் தொடர்ந்து பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, “பாஜகவினர்கள் எங்கு சென்றா லும் புகைப்படம் எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். அதே ஆர்வம் தான் பஞ்சாப்பில் வெளிப் பட்டுள்ளது. வெளிநாட்டில் ஒரு பிரச்சனை என்றால் ஒன்றிய அரசு உடனடியாக உதவி வழங்குகி றது. ஆனால் பஞ்சாப்பிற்கு ஏன் நிதியை வெளியிட முடிய வில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார். 12,000 கோடியை வழங்குக! பஞ்சாப்பிற்கு ரூ.1,600 கோடி க்கு மேல் வழங்க முடியாது என மோடி அரசு கைவிரித்துள்ளது. அதனால் பேரிடர் மேலாண்மை நிதி சுமார் ரூ.12,000 கோடி உள்ள நிலையில், அந்த நிதியை பயன் படுத்துவதற்கான விதிமுறைகளை ஒன்றிய அரசு தளர்த்த வேண்டும் எனவும் பஞ்சாப் நீர்வளத்துறை அமைச்சர் பரீந்தர் குமார் கோயல் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதுதொடர்பாக மோடி அரசு வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.