மணிப்பூரில் “தேசிய நெடுஞ்சாலை எண் - 2” திறந்தே தான் இருக்கிறது : மூடப்படவில்லை
மோடி அரசின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி - ஸோ கவுன்சில்
மணிப்பூர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக கட்ட விழ்த்து விட்ட வன்முறையால் (குக்கி - மெய்டெய் இனக்குழுக்கு இடையேயான மோதல்) இன்று வரை அம்மாநிலம் இயல்பு நிலையை இழந்து கலவர பூமியாக காட்சி அளித்து வருகிறது. இந்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து வருகின்றனர். வன்முறை கட்டுக் குள் வராததால் 2025 பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் மணிப்பூரின் குக்கி - ஸோ (பழங்குடி மக்கள்) கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், மணிப்பூர் அரசுக்கும் (குடியரசுத்தலைவர் ஆட்சிக் கட்டுப்பாடு), ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியாயின. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவில் “தேசிய நெடுஞ்சாலை எண் 2-ஐ (அசாம் - மிசோரம் - வழி மணிப்பூர்)” திறந்து விட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும், குக்கி - ஸோ கவுன்சிலும், பாதுகாப்புப் படையினரும் முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளனர் என்றும் செப். 4 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் “தேசிய நெடுஞ்சாலை எண் 2” திறந்துதான் இருக்கிறது, மூடப்படவில்லை என குக்கி - ஸோ கவுன்சில் அறிக்கை வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலை (என்எச்-02) ஒருபோதும் மூடப்படவோ அல்லது தடுக்கப் படவோ இல்லை. என்எச்-02 பயணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத் துக்காக சீராக திறந்தே உள்ளது. திறந்தே இருக்கும் சாலையை ஏன் மீண்டும் திறக்க வேண்டும்?” என குக்கி - ஸோ கவுன்சில் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது. இதன்மூலம் திறந்தே உள்ள நெடுஞ்சாலை யை மீண்டும் திறந்து, மணிப்பூரில் அமைதி திரும்பியது என்ற மோடி அரசின் பொய்யான செய்தியை குக்கி - ஸோ கவுன்சில் தனது அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.