tamilnadu

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் வி.ஏ.ஓ

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் வி.ஏ.ஓ முதல்வர் தலையிடக் கோரி பெ.சண்முகம் கடிதம்

சென்னை, நவ. 18 - புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுத்ததற்காக காவல்துறை யினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்கு களையும், சித்ரவதைகளையும் அனு பவித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவிவர்மா மீதான வழக்குகளை கைவிடுவதுடன், இந்தப் பிரச்சனையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திங்கட்கிழமையன்று (நவ. 17) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வருமாறு: மூன்று முறை கைது;  2 முறை சிறைவைப்பு புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வாண்டார்கோட்டை வருவாய் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் 2015-ஆம் ஆண்டு முதல் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலராக (V.A.O.) பணியாற்றி வந்துள்ளார். மணல் திருட்டைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆனால், மணல் திருட்டைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவிவர்மாவையே மூன்று  முறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில், இரண்டு முறை சிறையும் வைத்துள்ளனர். வட்டாட்சியரே கூறியும் ஏற்காத காவல்துறை முதல்முறை வல்லாத்திராக்கோட்டை பகுதியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வட்டாட்சியர் உத்தரவின் பேரில் மணல் கடத்தல் கும்பல் வைத்திருந்த மணலையும், ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார். ஆனால், மணல் திருட்டைக் கண்காணிக்க நிய மிக்கப்பட்ட சிறப்புக்குழுவானது, வி.ஏ.ஓ.  ஜெயரவிவர்மா தான் மணல் திருடுகிறார் என்று கூறி அவரைக் கைது செய்துள் ளது. வட்டாட்சியரின் உத்தரவைக் காட்டிய பிறகும் காவலர் பாலமுருகன் அதனைச் சட்டை செய்யாமல் கைது செய்திருக்கிறார். வட்டாட்சியர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து தன்னுடைய உத்தரவின் பேரிலேயே வி.ஏ.ஓ. பணி செய்வதாகச் சொன்ன பிற கும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர். ஆனால், நீதிமன்றத்தில் வட்டாட்சி யரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து, வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சிபிஎம் முறையீட்டால்  குண்டர் சட்டம் தவிர்ப்பு இதைப் பொறுத்துக் கொள்ளாத காவல்துறையினர் வி.ஏ.ஓ. மீது குண்டர் சட்டம் போட முயற்சித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் முறையிட்ட பிறகு குண்டர் சட்ட முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையில் வி.ஏ.ஓ. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2022  முதல் இன்று வரை (8 மாதம் தவிர) அவருக்கு பிழைப்பூதியம் கூட வழங்கப்படவில்லை. சட்டவிரோதக் கைது; பொய்யான கஞ்சா வழக்கு 18.2.2023 அன்று தனது தந்தையை மருத்துவத்திற்காக அழைத்துச் சென்ற போது மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த  காவல்துறை சார் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர் பிரபு ஆகியோர், வி.ஏ.ஓ.வின் வாகனத்தை நிறுத்தி தரக் குறைவாகத் திட்டி கார் சாவியையும், செல்போனையும் பிடுங்கிச் சென்றுள்  ளனர். புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சிறை வைத்துள்ளனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்நிலையத்திற்கு உள்ளேயே அவரது சட்டையில் சில பொட்டலங்களை வைத்து கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து சிலரிடம் கட்டாயப்படுத்தி கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்ததாக வாக்குமூலம் எழுதி வாங்கி யிருக்கின்றனர். 1.7 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை வி.ஏ.ஓ.வின் நண்பர்கள் கணேசன் மற்றும் சூர்ய  சந்திர பிரகாஷ் ஆகியோர் கடத்தி வந்த தாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். கைதுசெய்த காவல் ஆய்வாளர் முகமது ஜாபரே புகார்தாரராகவும் புலன் விசார ணை அதிகாரியாகவும் செயல்பட்டிருக் கிறார்.  ரவுடி பட்டியலிலும்  சேர்த்த காவல்துறை இதுகுறித்து, காவல்துறை உயர்  அதிகாரிகளுக்கு 11.05.2023 அன்று வி.ஏ.ஓ. ஜெயரவிவர்மா மனு கொடுத்துள் ளார். இது குறித்த வழக்கு மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் இருக்கிறது. இதேபோன்று வேறு பல வழக்குகளையும் அவர் மீது காவல்துறையினர் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளனர்.  தற்போது, 12.11.2025 அன்று வல்லாத்திரக்கோட்டை போலீசார் பிரிவு 110-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து,  வி.ஏ.ஓ. ஜெயரவிவர்மாவை ரவுடி லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள். தொடர்ச்சி யாக வழக்குகள் பதிவு செய்வதும், மிரட்டு வதுமாக ஒரு நேர்மையான அதிகாரியை மன உளைச்சலுக்கும், துன்புறுத்த லுக்கும் உள்ளாக்கி வருகின்றனர். 3 ஆண்டுகளாக  கடும் சித்ரவதை பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இந்த  வி.ஏ.ஓ., மணல் திருட்டை தடுப்பதற்காக வட்டாட்சியரின் உத்தரவோடு நேர்மையாக செயல்பட்டதற்காக வழக்கு களை சந்தித்து வருகிறார். பிழைப்பூதி யம் மறுக்கப்பட்டு கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் நேரடி யாக தலையிட வேண்டும். 1.மணல் திருட்டைத் தடுப்பதற்காக பழி வாங்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ. ஜெயரவி வர்மா மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் கைவிடப்பட வேண்டும். 2.மணல் திருட்டுக் கும்பலுக்கு ஆதரவாக அரசு பொறுப்புக்களை தவறாக பயன்படுத்தி நேர்மையான அலுவலரை சித்ரவதைக்கு உள்ளா க்கிக் கொண்டிருக்கும் காவல்துறை யினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.வி.ஏ.ஓ. ஜெயரவிவர்மா நேர்மையாக நடந்து கொண்டதற்காக பழிவாங்கப் பட்டு பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். 4.இதுவரையிலும் மறுக்கப்பட்டுள்ள பிழைப்பூதியத்தை உடனடியாக வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். 5.நடைபெற்றுள்ள சம்பவங்கள் அனைத் தும் திரைக்கதைகளை விஞ்சும் வகை யில் இருப்பதால் முழு உண்மையை வெளிக்கொணரும் வகையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தர விடப்பட வேண்டும். 6.மணல் திருட்டைத் தடுப்பதற்கு உரிய முறையில் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடி தத்தில் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.