கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இணையிலா இரட்டையர்
கம்யூனிஸ்ட் இயக் கத்திற்காக இன்னுயிர் நீத்த இணையிலா இரட்டை யர்களான மதுரை தோழர்கள் மாரி மற்றும் மணவாளன் ஆகியோரின் தியாகம் நவம்பர் 19 அன்று நினைவு கூரப்படுகிறது. தேசபக்தி மிக்க குடும்பப் பின்னணி யில் வந்த மணவாளன், இந்தி ஆசிரியராகப் பணியாற்றிய போதும் தேச விடுதலைப் போராட்டக் கருத்துகளைப் பரப்பி னார். தமிழ், இந்தி, சௌராஷ்டிரா, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நகரக் குழுவின் செயலாளராகச் செயல்பட்டார். தொழிலாளி வர்க்கச் சிந்தனையுடன் கட்சிக்குள் வந்த மாரி, சமூக விரோத சக்திகளை எதிர்த்து அஞ்சா நெஞ்சத்துடன் போராடி யவர்; இதனால் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். தமிழ், உருது, சௌராஷ்டிரா என மூன்று மொழிகளில் அவருக்குப் புலமை இருந்தது. 1949 நவம்பர் 19 அன்று, மதுரையில் ஒரு வீட்டில் தலை மறைவாக இருந்த மணவாளன் மற்றும் மாரியை, துரோகி யின் உதவியுடன் சுமார் ஐநூறு போலீசார் சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் மணவாளன் மற்றும் 27 வயதே ஆன திரு மணமாகாத மாரி ஆகிய இருவரும், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழங்கியபடியே வீரமரணமடைந்தனர். இவர்களின் இணை யற்ற தியாகம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாகும்.
