tamilnadu

img

சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் கைது திருவாரூர் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் கைது  திருவாரூர் மாவட்ட காவல்துறையை  கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர், நவ.18-  சிஐடியு மாவட்ட நிர்வாகிகளை நள்ளி ரவில் கைது செய்துள்ள திருவாரூர் மாவட்ட காவல்துறையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பாக, திருவாரூர் காவல் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் சம்பந்தமாக கடந்த ஆண்டு முதல் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கோரிக்கை நிறைவேறாததால் அக்.31 அன்று சிஐடியு மாவட்டக் குழு சார்பாக,  திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தை ஒட்டி, காவல்துறைக் கும், போராட்டக்காரர்களுக்கும் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அரசு தரப்பில் உறுதி அளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில், போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு  நடைபெறாது என்ற உத்தரவாதம் அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நவ.18 (செவ்வாய்க் கிழமை) அன்று சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர் ஜி.பழனிவேல் மற்றும் உறுப்பினர்கள் ஆர். ஐயப்பன், டி. முருகதாஸ், ஜெ.விஜயசந்தர், பாலமுத்து ஆகிய 7 பேரை நள்ளிரவில் காவல்துறை கைது செய்துள்ளது.  இதில் தோழர்கள் ஐயப்பன், விஜயசந்தர், முருகதாஸ் ஆகியோர் சிபிஎம் திருவாரூர் மாவட்ட  அலுவலகத்தில் தங்கியிருந்தபோது, கட்சி அலுவலகத்திற்குச் சென்று அராஜகமான முறையில் காவல்துறை யினர் கைது  செய்துள்ளனர். இச்செய்தியை அறிந்த சிபிஎம்  தலைவர்கள் உடனடியாக போராட்டத் திற்கு அறைகூவல் விடுத்தனர். மாபெரும் கண்டன பேரணி காவல்துறையைக் கண்டித்து, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தி லிருந்து பேரணியாகச் சென்று நகர காவல் நிலையம் முன்பாக, மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு பொறுப்பாளருமான ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என். முருகானந்தம், எம். சேகர், பி. கந்தசாமி, டி. வீரபாண்டியன், கே.ஜி. ரகுராமன், என். ராதா, பா.கோமதி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி. ஜோதிபாஸ், மாநிலக் குழு உறுப்பினர் இரா.மாலதி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஹரிஹரன், நகரச் செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார், நகரத் தலைவர் எம். தியாகராஜன், நகரப் பொருளாளர் யு.பூவரசன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், தோழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் ஏடிஎஸ்பி தலைமையில், சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மேற்கொண்டு கைது நடவடிக்கை இருக்காது. இப்பிரச்சனைக்கு, அடிப்படையாக உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது சம்பந்தமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் உரிய முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளிக்கப்பட்டது.  இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.