‘அதிமுகவினரின் வாக்குரிமை பறிப்புக்கு துணைபோகும் எடப்பாடி பழனிசாமி’ பெ.சண்முகம் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியின் எஸ்ஐஆர் ஆதரவை விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களே! திமுக எதிர்ப்பு அல்லது பாஜக ஆதரவு என்பதற்காக, உங்கள் கட்சிக்காரர்களின் வாக்குரிமையை பறிக்க எஸ்.ஐ.ஆருக்குத் துணை போகாதீர்கள்” என்று கூறி யுள்ளார். “தேர்தல் கூட்டணி அவ்வப்போது மாறலாம். ஆனால், மக்களுக்கு வாக்குரிமை என்பது நிரந்தரமானது. அதைப் பாதுகாப்பது தான் கட்சிகளின் இன்றைய உடனடி கடமை!” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “வாக்குரிமையை விட்டுத்தர மாட்டோம்; பாஜகவை தமிழ்நாடு நிராகரிப்பது உறுதி; தேர்தல் ஆணை யமே, அவசர கதியிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்து!” என்றும் பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.