tamilnadu

img

களப்பணிகளை முறைப்படுத்த நில அளவை அலுவலர்கள் கோரிக்கை

களப்பணிகளை முறைப்படுத்த நில அளவை அலுவலர்கள் கோரிக்கை

சென்னை, நவ.18 - களப் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைத்து, நில அள வைத் துறையின் பணிகளை முறைப் படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு நவம்பர் 18 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கி யுள்ளது. இந்தப் போராட்டத்தில் 90 விழுக்காடு ஊழியர்கள் பங்கேற்று உள்ளதால், நில அளவைத் துறை யின் பணிகள் பெருமளவில் முடங்கி யுள்ளன. தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பணியிடங்களை மீண்டும் உயர்த்தி வழங்குதல், ஒப்பந்த அடிப் படையில் லைசென்ஸ் சர்வே யர்களை நியமிக்கும் முறையைக் கைவிடுதல், வெளிமுகமை புல  உதவியாளர் முறையைக் கைவிடு தல் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெறுகிறது. இதுகுறித்து அமைப்பின் பொதுச் செயலாளர் அண்ணா. குபே ரன் பேசுகையில், இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் களப் பணியாளர்களுக்கு மனித சக்திக்கு மீறிய பணிச்சுமை குறியீடு இருப்ப தால் அதனைக் குறைக்க வேண்டும்  என்று வலியுறுத்தினார்.  மேலும், பதவி உயர்வு பெறத்  தகுதியுள்ளவர்களுக்கு உடனடி யாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் பணியா ளர் தேர்வாணையம் நில அளவர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.