tamilnadu

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி  ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்

வெறிச்சோடிய  அரசு அலுவலகங்கள் 

வெறிச்சோடிய  அரசு அலுவலகங்கள் சென்னை, நவ.18 - பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை (நவ.18) மாநிலம் தழுவிய ஒருநாள் அடை யாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும்  அரசு ஊழியர்கள் பங்கேற்றதால், கோவை,  திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவல கங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.  ஏப்ரல் 2003-க்குப் பிறகு அரசுப் பணி யில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் (CPS) கைவிட்டு பழைய ஓய்வூதி யத் திட்டத்தை (OPS) செயல்படுத்துதல், ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணை யான ஊதியம், ஊதிய முரண்பாடுகளைச் சரி செய்தல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல முக்கியக் கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் நடந்தது. சென்னை எழிலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் வருவாய்த் துறை,  தலைமைச் செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மு. பாஸ்கரன், “முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அளித்த வாக்குறு திகளை ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு கள் முடிவடைந்தும் நிறைவேற்றாததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். மேலும், ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.84,000 கோடியை  முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி யில் இருந்தே பழைய ஓய்வூதியத்தை வழங்க  முடியும் என்றும், இதனால் அரசுக்கு எந்தச்  சுமையும் இல்லை” என்றும் அவர் கூறினார். சிபிஎஸ்(CPS)-ன் கீழ் பணியில் சேர்ந்த 52,000 குடும்பங்கள் ஓய்வூதியமின்றி உள்ள தைச் சுட்டிக்காட்டிய அவர், “தமிழக அரசு உட னடியாக பழைய பென்சன் திட்டத்தை (OPS)  செயல்படுத்த வேண்டும் என்றும், இல்லை யேல் அடுத்த கட்டப் போராட்டத்தை ஜாக்டோ- ஜியோ அறிவிக்கும்” என்றும் கூறினார்.