பிரதமர் மோடி இன்று கோவை வருகை
சென்னை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்ட மைப்பு சார்பில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நவ. 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலி யுறுத்தியும் கோவை கொடிசியா வளாகத்தில் புதன்கிழமை (நவ.19) நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர், நவ.19 அன்று மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கொடிசியா வளாகத்துக்கு சென்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடி சியாவிலிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி செல்கிறார். பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஜோன்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த பகுதிகளில் புதனன்று (நவ.19) இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பி.எம். கிசான் லிங்க்-இல் நுழைந்ததால் ரூ.10 லட்சம் மாயம்
விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி யின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் சைபர் மோ சடியில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ரோசல்பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (47). இவர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இவரது கைப்பேசி எண்ணிற்கு “பிஎம் கிசான்” என்ற பெயரில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அரசுத் திட்டம் என தவறாக கருதிய அவர் அதில் நுழைந்துள்ளார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ் செய்திகள் அவரின் கைப்பேசிக்கு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ் உடனே விருதுநகர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராம தாஸ் பாஜக நிர்வாகியாக இருப்பதை அறிந்தே சைபர் குற்ற வாளி பி.எம்.கிசான் பெயரில் போலி லிங்கை அனுப்பி யுள்ளார். அவர் அதில் உள்நுழைந்ததைத் தொடர்ந்து, அவரது வங்கி விவரங்கள் திருடப்பட்டு பணம் பறிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளியாகக் குறிப்பிட்டு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்புகளும், செடிகளும் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி திருவல்லிக்கேணி போலீசார் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது! அமைச்சர்
அறிவுறுத்தல் சென்னை, நவ.18- பள்ளிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது என்றும், அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். மழை காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக அமைச் சர் கூறினார். பள்ளி வளா கத்தில் உள்ள கிணறு களை மூட வேண்டும் என்றும், மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என் றும் அவர் அறிவுறுத்தி யுள்ளார்.
திருத்தம் 18.10.2025 அன்று
மூன்றாம் பக்கத்தில் வெளியான “சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குக! சாம்சங் தொழிலாளர்கள் நடைபயணம்: 32 பேர் கைது” என்ற செய்தியில், தொ ழிற்சாலையில் நிர்வாகத் திற்கு எதிரான செயலில் ஈடு பட்ட என்று தவறுதலாக வந்துள்ளது. “தொழிற்சா லையில் நிர்வாகத்திற்கு எதி ரான செயலில் ஈடுபட்டதாக” என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். ஆசிரியர்