சிபிஎம் முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு
திருவாரூர், நவ.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் கோ.வீரய்யன் 7 ஆம் ஆண்டு நினைவு தின பேரவை-அஞ்சலி நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், சித்தாடியில் செவ்வாயன்று நடைபெற்றது. குடவாசல் அருகே உள்ள சித்தாடியில் உள்ள தோழர் ஜீவி நினைவிடத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சி யில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் சாமி.நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ஜி.சுந்தரமூர்த்தி, எம்.சேகர், பி.கந்தசாமி மற்றும் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெ னின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, சிபிஎம் குடவாசல் அலுவல கத்தில் ஜீவி நினைவு தின பேரவை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். குடவாசல் நகரச் செய லாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலா ளர் டி.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். முன்னதாக குடவாசல் அலுவலகத்தில் உள்ள தோழர் ஜீவி சிலைக்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
