tamilnadu

img

சங்கம் அமைக்கும் உரிமை சட்டத்திற்கு விரோதமானதா?

தஞ்சாவூர், செப்.22 -  மக்கள் தலைவர், தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 100 ஆவது ஆண்டு பிறந்த நாள் துவக்க விழா பொதுக்கூட்டம், பூதலூர் தாலுகா ராய முண்டான்பட்டி தியாகி என்.வி நினைவுத் திடலில் சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் கே.ரமணி, ஆர்.மனோஜ், வி.சந்தோஷ் ஆகியோர்  தலைமை வகித்தனர். பூதலூர் தெற்கு  ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் வர வேற்றார். அப்போது, மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: அனைத்து மனிதர்களும் விடுதலை  பெற வேண்டும் என்ற உயர்ந்த சித்தாந் தத்தை கொண்டவர் என்.வி. செங் கொடி உயர்ந்து பறக்க வேண்டும் என்ற  கொள்கையை தூக்கிப் பிடித்தவர். ஒரு போராளி எப்படி இருக்க வேண்டும்  என்ற அடையாளத்திற்கு இலக்கணம் வகுத்தவர். ஒரு பக்கம் சமூக நீதிக்கும்,  மறுபக்கம் வர்க்கச் சுரண்டலில் இருந்து  விடுதலை பெறுவதற்கும் இணைந்து,  மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படை யில் குரல் கொடுத்தவர்.  மக்களுக்கான சமத்துவப் போராட் டத்தில் எங்களுடைய உயிரே போனா லும் சரி, என தியாகத்திற்கு அடையாள மாக திகழ்ந்தவர். தற்போதைய 21  ஆம் நூற்றாண்டிலும், சாம்சங் நிறுவ னத்தில் தொழிற்சங்கத்தை கட்டமைப்ப தற்கு போராட வேண்டிய நிலை உள்ளது  என்றால், என்.வி. வாழ்ந்த பிற்போக்கு  சக்திகள், ஆதிக்க சக்திகள் கோலோச் சுகிற அந்த காலக் கட்டத்தில் சமூக கொடுமைகளை எதிர்த்து போராட்டம் நடத்தவும், அணி திரட்டுவது என்பதும்  சாதாரணமான விஷயமாக இருந்திருக் காது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் தொழிற்சாலையில் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகையில் காவல்துறை அவர்களி டம் பேசி சமாதானம் செய்து வைத்திருக்க  வேண்டும். உதவி செய்து தீர்வு காண  தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்ச னையை தீர்க்க என்ன செய்ய வேண்டும்  என்று தமிழக அரசும் யோசித்திருக்க  வேண்டும். ஆனால் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்து அலைக்கழிக்க வைக்கிறது.  போராட்டம் நடத்த இடம் கொடுத்த  தனி நபரை மிரட்டுகிறது, அச்சுறுத்து கிறது. சங்கம் அமைக்கும் உரிமை சட்டத்திற்கு விரோதமானதா என்ன?  இவ்வாறு அவர் பேசினார்.  மாநிலக்குழு உறுப்பினர்

எம்.சின்னத் துரை எம்எல்ஏ பேசுகையில், “எத்த னையோ தலைவர்கள், எத்தனையோ தியாகங்களை செய்திருக்கலாம். ஆனால் பட்டியலின, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்தவர் தியாகி என்.வி  என்பதை இந்த மாவட்டம் மட்டுமல்ல, தமிழகமே மறுக்காது.  மனிதனை மனிதன் சுரண்டுகிற,  மனிதனை மனிதன் அடிமைப்படுத்து கிற கொடிய அட்டூழியத்தை அழித் தொழிப்பதற்காக பிறந்த ஒரு புத்தம்  புது மனிதர்தான் தோழர் என்.வெங்க டாசலம். சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட பட்டியலின மக்களின் தோளில் கை  போட்டு, ‘நான் இருக்கிறேன். வா’  என்று அழைத்துச் சென்றவர் என்.வி.  பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களும் மனிதர்கள்தான். பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சார்ந்தவர்களும் மனிதர்கள் தான் என்ற கொள்கை உடையவர் அவர்” என்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு, மாவட்டக் குழு, ஒன்றியக் குழு  உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், கிளைச் செயலாளர்கள், அரங்க தோழர்கள் கலந்து கொண்ட னர்.  நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண் டனர். முன்னதாக தியாகி என்.வி நினை விடத்தில் தலைவர்கள் மாலை அணி வித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.