games

img

விளையாட்டு...

சென்னை டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி சொந்த மண்ணில் ஆட்டநாயகன் விருதை வென்ற அஸ்வின்

வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2  விதமான போட்டிகளை கொண்ட தொட ரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ் வான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டம் தமிழ்நாடு  தலைநகர் சென்னையில் வியாழனன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது. அதன்படி முதலில் களமிற ங்கிய இந்திய அணி அஸ்வினின் (113) அபார சதத்தின் உதவியால், முதல் இன்னிங்சில் 376 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. வங்கதேச அணி தரப்பில் அதி கப்பட்சமாக ஹாசன் மகமூத் 5 விக் கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் பும்ரா (4 விக்கெட்டுகள்) வேகத்தை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 227 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, சப்மன் கில் (119) - ரிஷப் பண்டின் (109) அபார ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களுடன் டிக்ளர் செய்து, வங்கதேச அணியின் வெற்றி இலக்காக 515 ரன்கள் நிர்ணயம் செய்தது. அஸ்வின் சுழலில் சரிந்த வங்கதேசம் 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்குடன் கள மிறங்கிய வங்கதேச அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 37.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது. சன்டோ (51), சாகிப் (5)  ஆகி யோர் களத்தில் இருந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டம் நடை பெற்றது. 4ஆம் நாள் ஆட்டத்திலும் அஸ்வினின் மாயாஜால சூழலில் சிக்கித் தவித்த வங்கதேசம் அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே 62.1 ஓவர்களில் 234 ரன்களில் சுருண்டது. வங்கதேச அணி தரப்பில் சன்டோ 82 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6  விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்று, 2 போட்டிகளை டெஸ்ட் தொட ரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் சத மடித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாடு வீரர் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் (உ.பி.,) செப்., 27  அன்று நடைபெறுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

2036 ஒலிம்பிக் போட்டிக்கான நகரத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்தும் இந்தியா

2036ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா எடுக்கும் என்று பிரதமர் மோடி  கடந்த ஆண்டு அறிவித்தார். ஒலிம்பிக் போட்டி களை நடத்துவதற்கான நகரமாக அகமதாபாத் இருக்கும் என பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊட கங்கள் அறிவித்து, மேலும் மக்களவை தேர்தலின் பொழுது  “மோடியால் கிடைத்த ஒலிம்பிக்” என பிரச்சாரம் செய்தது. ஆனால் பிரதமர் மோடி அறிவித்து ஒரு வருடம்  ஆகியுள்ள நிலையில்,  2036இல் நடைபெவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான எந்த நகரத்தையும் இந்திய ஒலிம்பிக் சங்கம்  இதுவரை எங்களுக்கு  அனுப்பவில்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்து வதற்காக இந்தோனேசியா, துருக்கி போன்ற நாடுகள் நகரங்களை முன்னரே தேர்வு செய்து அனுப்பியுள்ளன. எந்தெந்த நாடுகள் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளன என்ற அறிவிப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிடாத போதிலும், இரட்டை இலக்கத்தில் இதுவரை விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கூறியுள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிக்கான நகரத்தை அனுப்பாமல் இருக்கும் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.