games

img

விளையாட்டு...

சென்னை டெஸ்ட் பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்  வலுவான நிலையில் இந்தியா

வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2 வித மான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வியாழனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் திணற மூத்த ஆல்ரவுண்டர்களான அஸ்வின் (113), ஜடேஜா (86) ஆகி யோரின் அபார ஆட்டத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91.2  ஓவர்களில் 376 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. வங்கதேச அணி தரப்பில் ஹாசன் மகமூத் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கிய வங்கதேச அணி பும்ரா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. பும்ராவுடன் (4 விக்கெட்டுகள்), சிராஜ் (2 விக் கெட்டுகள்), ஆகாஷ் தீப் (2 விக்கெட்டு கள்), ஜடேஜாவும் (2 விக்கெட்டுகள்) கூடுதல் தாக்குதலை தொடுக்க வங்க தேச அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 227 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக ரன் குவித்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து, 308 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா வலுவான நிலையில் உள் ளது. தொடர்ந்து சனியன்று காலை 9:30  மணியளவில் 3ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ஹாக்கியிலும் “காவி”  நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்

மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் உள்ள அனை த்து அரசு துறைகளின் சின்னங்களும், ரயிலின் (வந்தே பாரத்) வண்ணங்  களும், அலுவலக சுவர்களின் நிறங்கள், கிரிக்கெட் மைதானங்கள் “காவி” வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளன. அதே போல மோடியின் நெருங்கிய நண்பரும், ஒன்றிய உள்துறை அமைச் சருமான அமித் ஷா மகன் ஜெய் ஷா (பிசிசிஐ செயலாளர்) உதவியுடன் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் ஜெர்சிகளும் (விளையாட்டு உடைகள்) 30% அளவில் “காவி” நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த  விவகாரத்திற்கு இந்திய கிரிக்கெட் ரசி கர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கிரிக்கெட் போல தற்போது ஹாக்கி பிரிவிலும் “காவி” வண்ணத்தை புகுத்தியுள்ளது மோடி அரசு. இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெரும்பாலும் வெள்ளை, ஊதா ஆகிய இரண்டு வண்ண ஜெர்சியை மட்டுமே அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்திய அணி, மேலே வெள்ளை மற்றும் கீழே காவி வண்ணம் கலந்த ஜெர்சியை அணிந்து விளையாடியது. அணியின் கட்டமைப்பை மேம்படுத் தாமல் ஜெர்சிகளின் வண்ணத்தை மட் டும் மாற்றி என்ன ஆகப் போகிறது? என ஹாக்கி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய விளையாட்டு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.