tamilnadu

img

மண்வாசம், மனிதநேசம் பேசும் கோழிப்பண்ணை செல்லதுரை!

தமிழ் திரைப்பட உலகில் மண் வாசம், மனிதம் பேசும் படங்களில் முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர் சிக ரங்கள் பாரதிராஜா, மகேந்தி ரன் வரிசையில் சீனு ராமசாமி யும் ஒருவர். இவரது, இயக்கத் தில் உருவாகிய ஒன்பதாவது திரைப்படம்தான் கோழிப்பண்ணை செல்லதுரை. எதார்த்தமான சராசரி மனிதனின் வாழ்க்கைக் கதைகளை கிராம வாசனை மாறாமல் மனதுக்கு நெருக்கமாக கொடுத்து தேசிய விருது பெற்ற படைப் பாளிகளில் ஒருவரான சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்ம துரை, மாமனிதன் திரைப்படங்கள் மாறுபட்ட கதைக் களத்துடன் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றன.  அந்த வரிசையில் உருவாகி இருக்கும் கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம், இந்த மாதம்  20 ஆம் தேதி திரையிடப்பட்டது. அதன் சிறப்புக் காட்சி சென்னை பிரசாத் ஸ்டுடியோ திரையரங்கில் திரையிடப்பட்ட போது, படக்குழுவினருடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவனுள்ள படைப்பாக அமைந்திருக்கும் இப்படம் செப்.12 அன்று அமெரிக்காவில் தொ டங்கிய ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழா வில், செப்.18 அன்று இந்திய நேரப்படி இரவு 8  மணிக்கு திரையிடப்பட்டது. கடந்த 22 ஆண்டு கால வரலாற்றில் சர்வதேச விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் கோழிப் பண்ணை செல்லதுரை என்பது பெருமை.

மண் மணம் மணக்கிறது

கிராமத்து மண் சார்ந்த வாழ்வியல், அண்ணன் -தங்கை உறவு, பாசம் மற்றும் காதலை மையப் படுத்தியதோடு அல்லாமல் திரைக்கதையில் புதிய தொரு ட்ரீட்மெண்ட்டை கையாண்டு, படமாக்கப்பட்டி ருக்கிறது. தொடக்கம் முதல் முடியும் வரைக்கும் வெகு இயல்பாகவும் பாசத்தின் வலிமையை, மனித நேயத்தின் அவசியத்தை சற்றும் தொய்வு இல்லா மல் இரண்டரை மணி நேரத்தையும் முழுக்க முழுக்க  ஆக்கிரமித்துக் கொள்கிறது. மண் மணத்தோடு வட்டார பண்பாட்டு சித்த ரிப்புகளையும் சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்திகளை காட்சியின் வழியாக இயக்குநர் சொல் வது பார்வையாளர்களை ஈர்க்கிறது. குழந்தைகள் உள்பட குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக  ரசிக்கும் வகையில், படம் அமைந்திருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சுகிறது! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றிற் கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.  மாவட்டங்களி லேயே மிக அழகான மாவட்டம் எனப் பெயர் பெற்றது  தேனி மாவட்டம். வசீகரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிழல்களில் அமைந்துள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி கிராமங்களின் இயற்கை  எழில் கொஞ்சுகிறது. காடுகளின் இயல்பு படம் முழுவதும் பரவியிருக் கிறது. தென்மேற்கு பருவக்காற்று இயற்கையை பிரதிபலிக்கிறது. ஆற்றங்கரைகளில் இருந்து நீர்வீழ்ச்சிகள், அணைகள், மலைகள் வரை கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அதாவது, இந்த படத்தில் அசோக் ராஜ் ஒளிப்பதிவு அனைத் தும் இயற்கையாகவே அமைந்துள்ளது.

அறிமுகக் கலைஞர்கள்

கோலமாவு கோகிலா படத்தில் குடும்ப பாரத்தை  சுமக்கும் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்தி ரத்தில் அசத்திய யோகி பாபு, கோழிப் பண்ணை செல்லதுரையில் வேறொரு வித்தியாசமான வேடத் தில் நம்மை வசீகரிக்கிறார். இந்த படத்தில் அறிமுகமாகும் நாயகன் ஏகன் (செல்லத்துரை), நாயகி பிரிகிடா (செந்தாமரை செல்வி) இருவருக்கும் இது முதல் படம் என்றா லும், எந்த இடத்திலும் பதற்றம் இல்லாமல் இயல்பாக  நடித்திருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல் தங்கை யாக நடித்திருக்கும் சத்யா தேவியின் நடிப்பும் அருமை. இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ்  நிறுவனம் சார்பில் டி.அருளானந்து தயாரித்திருக் கிறார். இவர் இந்தப் படத்தின் கதாநாயகன் ஏகனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும். யோகி பாபுவின் குணச்சித்திர நடிப்புடன், நகைச்சுவை காட்சிகளில் படம் முழுவதும் கலக்கும்  ‘குட்டி புலி’ தினேஷ் முத்திரை பதித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் கதை சொல்லி பவா செல்லதுரை அசத்துகிறார். தோழர் பாத்தி ரத்தில் அறிமுகமாகும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரான இரா.தெ.முத்து வெகு இயல் பாக நடித்திருக்கிறார். லியோனியின் மகன் லியோ  சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, மானஸி, கொட்டாச்சி  உள்ளிட்ட அனைவரது நடிப்பும் அசத்தலாக உள்ளது.

வைர வரிகள்...

இந்த படத்தில் வைரமுத்து, பா.விஜய், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். குறிப்பாக, வைரமுத்து வரிகளில் “பொன்னான பொட்ட புள்ள, பொத்தி பொத்தி வளர்ந்த புள்ள, ஊரை விட்டு போகையில உசுரு முட்டுதே...” என்ற  பாடல் மனதை வருடுகிறது. கருத்தம்மா பாடலை நினைவுபடுத்தும் இந்தப் பாடலுக்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஆனந்த் அர விந்தாக்சன், சைந்தவி இருவரும் இணைந்து பாடிய மெல்லிசை பாடல் ரசிக்கும்படி உள்ளது. கிராமத்து கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அண்ணன்-தங்கை இடையே யான பாடலை புல்லாங்குழல் இசை இனிமையாக்கி யிருக்கிறது. மற்றொரு பாடலான கங்கை அமரன் வரிகளில் “காத்திருந்தேன் உனக்குத்தான்...” பாடலை சின்மயி மிகவும் அருமையாக பாடியு உள்ளார். இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, “தேவ தையைப் போல தேகம் எல்லாம் நாங்க அழகு...” என்ற பாடல் மூன்றாம் பாலினத்தவரின் உணர்வு களை உள்ளபடி மனிதநேயத்துடன் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. சிவாஜி-சாவித்திரி நடிப்பில் காத்தால் அழி யாத அண்ணன்-தங்கை பாசமலர், சூப்பர் ஸ்டார்  நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும், நெப்போலி யன் நடித்த கிழக்கு சீமையிலே வரிசையில் இந்த தலைமுறைக்கு ஏற்றார்போல் உணர்வுப் பூர்வமாக அமைந்திருக்கும் சீனு ராமசாமியின் இந்த படம், வாழ்க்கை மீது நம்பிக்கை வரவேண்டும்  என்பதையும் ஆணித்தரமாக சொல்கிறது.

 சி. ஸ்ரீராமுலு