states

img

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஜெமினி லைவ் அம்சம்!

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு ஜெமினி லைவ் அம்சம்!

ஜெமினி லைவ் ஏஐ அம்சம் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர் களுக்கும் கிடைக்கும் என்று கூகுள் நிறு வனம் அறிவித்துள்ளது.  கூகுள் நிறுவனத்தின் சாட்பாட்டான ஜெமினி லைவ், முன்னதாக அட்வான்ஸ்டு சப்ஸ்கிரைபர்களுக்கு (Advanced Subs cribers) மட்டுமே கிடைத்து வந்த நிலையில்,  தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர் களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த அம்சத்தை Enable செய்வதன் மூலம்,  பயனர்கள் சாட்பாட்டுடன் இருவழி உரையா டல்கள் செய்யவும், தகவல்களைப் பெறவும் முடியும். மேலும், பயனர்களின் அனைத்து உரை யாடல்களையும் ஜெமினி லைவ் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதன் மூலமாக பய னர்கள் தங்களுடைய பழைய உரையாடல் களை பார்த்துக் கொள்ள முடியும்.  ஜெமினி  லைவ் அம்சம் தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு  வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.டி.பி மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீ பத்திய தரவு களின்படி, இந்தியாவில் நிதி மோசடி கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.  பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருந் தாலும், ஹேக்கர்கள் நிதி மோசடியில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒன் டைம்  பாஸ்வேர்டு (OTP) மோசடிகள் அதிகரித் துள்ளன. பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு வங்கி அதி காரிகள் போலவும், அரசு அதிகாரிகள் போலவும் பேசி, ஹேக்கர்கள் அவர்களி டம் ஓடிபி-ஐபெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.  இந்நிலையில், பொதுமக்கள் ஓ.டி.பி மோசடியில் சிக்காமல் கவனமாக இருக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை Indian Computer Emergency Response Team  (Cert-In) தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு: 1) வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் Toll-Free எண்ணை போ லவே இருக்கும் எண்களில் இருந்து வரும்  அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், 2) கிரெடிட்/டெபிட் கார்டு விவரம், CVV,  OTP, கணக்கு எண், பிறந்த தேதி, டெபிட் /கிரெடிட் கார்டுகளின் காலாவதி தேதி போன்ற எந்த தனிப்பட்ட தகவலையும் தெரி யாத நபர்களிடம் பகிர வேண்டாம். 3) எப்பொழுதும் வங்கியின் அதிகா ரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீ கரிக்கப்பட்ட நிறுவனத்திற்குச் சென்று, அழைப்பு/எஸ்எம்எஸ் பெறப்பட்ட எண் ணைச் சரிபார்க்கவும். 4) கேஷ்பேக்குகள் அல்லது ரிவார்டு பாயிண்ட்டுகள் அல்லது இதுபோன்ற சலு கைகள் போன்றவற்றிற்காக தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றில் OTP-களைப் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது.

ஏஐ புகைப்படங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பம்!

ஏஐ புகைப்படங்களை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை கூகுள் வடிவமைக்க இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.  ஏஐ புகைப்படங்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளும், மோசடிகளும் அதிகரித்து வரும் இந்த சூழலில், ஏஐ மூலம் உருவாக் கப்பட்ட புகைப்படங்களையும், போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப் படங்களையும் அடையாளம் காணும் புதிய  தொழில்நுட்பத்தை உருவாக்க கூகுள் திட்ட மிட்டுள்ளது. Content Provenance and au thenticity (C2PA)  என்ற அமைப்புடன் இணைந்து கூகுள் நிறுவனம் இந்த தொழில் நுட்பத்தை வடிவமைக்க உள்ளது.