states

முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியை “பாகிஸ்தான்” எனக் கூறிய கர்நாடக நீதிபதி உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேத வியாசாச்சார் ஸ்ரீஷானந்தா நிலத்தின் உரிமையாளர் - குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்கறிஞரிடம் சர்ச்சைக்குரிய வகை யில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “கோரிபால்யா வில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம்பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என அவர் கூறினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியான கோரிபால்யா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். அதனால் தான் அப்பகுதியை “பாகிஸ் தான்” பகுதி என நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் (சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய்) கொண்ட அமர்வு கண்டனம் தெரிவித்துள் ளது. விசாரணையின் பொழுது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகை யில், “கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஊடக செய்திகள் மூலம் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவ ரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி வழக்கை செப்., 25 அன்றுக்கு ஒத்திவைத்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசாச்சார் ஸ்ரீஷானந்தா சமூகவலைத்தளங்களில் டாப் ஆர்டரில் வெளியாகி வரும் நிலையில், அவரது இந்துத்துவா கொள்கை பேச்சிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.