tamilnadu

img

பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்கு கடனை வசூலிக்க செல்லக் கூடாது!

நாமக்கல், செப்.22 - ‘கடன் வசூலிக்கிறோம்’ என்ற பெயரில், பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்கு நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் செல்லக் கூடாது என்பதை மாநில அரசு விதி யாக அறிவிக்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை யால் வேலையின்மை, கல்வி, உணவுப்  பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், விசைத்தறி, தையல், கட்டுமானம், சுமை தூக்குபவர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் வாழ்க்கை  நடத்துவதற்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை நீடிக்கிறது.  

குழந்தைகளின் உயர்கல்வி, திரு மணம் உள்ளிட்ட தேவைகளுக்கு, பொதுத்துறை வங்கிகள் மூலம் தனி நபர்களுக்கு எளிய முறையில் கடன்  வழங்க மறுக்கப்பட்டு, அலைக்கழிக் கப்படும் சூழல் உள்ளது. இதனால் தனியார் நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை நாட வேண்டிய கட்டாயத் திற்கு ஏழை-எளிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.  மக்களுக்கு எளிதாக கடன் தரு வதாகக் கூறி, ஏழை, எளிய மக்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் ஆதார் அட்டையை மட்டும் பெற்றுக்கொண்டு கடன் வழங்குகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் நடைமுறைச் சட்டங்களை நிதி நிறுவனங்கள் மற்றும்  கந்துவட்டிக்காரர்கள் பின்பற்றுவ தில்லை. கடன் தவணை செலுத்த  தவறும்பட்சத்தில் கடன் வசூலிக்கும் ஊழியர்கள், பெண்களிடம் மிகவும் மோசமான வார்த்தைகள் பயன்படுத்து தல், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வது, மிரட்டுவது மற்றும்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கு வது போன்ற மோசமான நிலைமை தொ டர்கிறது. கிராமப்புற, நகர்ப்புற  அடித்தட்டு மக்களின் பொருளா தாரத்தை உயர்த்த உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை தனி யார் நுண்நிதி நிறுவனங்கள் சீரழித்து வருகின்றன.

சிறப்பு மாநாடு

நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களின் இவ்வாறான மோசமான நடவடிக்கைகளால், நாமக் கல் மாவட்டத்தில், கடன் தொல்லை காரணமாக தொடர் தற்கொலை சம்ப வங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளது.  இந்நிலையில், மக்களை கடன் வலையிருந்து மீட்டிட, நுண் நிதி நிறு வனங்கள் மற்றும் கந்துவட்டி முறையை  ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று சிறப்பு மாநாடு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பழனியப்பன் பாவா யம்மாள் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி  தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்

நுண்நிதி நிறுவனங்கள், கந்து வட்டி கும்பல்களிடமிருந்து சாதாரண ஏழை, எளிய உழைப்பாளி மக்களை பாதுகாக்க, தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் தேவைப்படுவோருக்கு குறை வான வட்டி விகிதத்தில் கடன் வழங்க  வேண்டும். தமிழக அரசின் கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை மாவட்ட நிர்வா கம் மற்றும் காவல்துறை இணைந்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நுண் நிதி நிறுவனங்கள், கந்துவட்டி கும்பலை மீது சட்ட ரீதியான நடவ டிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.  உழைப்பாளி மக்கள் தாங்கள் பெற்றுள்ள கடன், அதனால் ஏற்பட்டு உள்ள சிரமம் துயரம் குறித்த புகார் களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகம், வட்டார அளவில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறையை கொண்டு குழுக்கள் அமைக்க வேண்டும். கடன்  வசூலிக்கிறோம் என்ற பெயரில் நுண் நிதி நிறுவனங்களோ, கந்துவட்டி நிறுவனங்களோ, அமைப்புகளோ, மாலை 6 மணிக்கு மேல் நகர்ப்புற, கிராமப்புற பகுதியிலுள்ள வீடு களுக்கு செல்லக் கூடாது. மேலும், பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்கு  கட்டாயம் செல்லக் கூடாது என்பதை,  மாநில அரசு விதியாக அறிவிக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டி குறித்த விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை மாவட்ட நிர்வா கம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், சிபிஎம் மாநில  செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெரு மாள், எம்.அசோகன், என்.வேலுச்சாமி,  கே.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, பி.ஜெய மணி, சு.சுரேஷ், ஏ.டி.கண்ணன், எம்.கணேச பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.மோகன், இ.கோ விந்தராஜ், ஆர்.அலமேலு, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.