districts

திருச்சி முக்கிய செய்திகள்

கைப்பந்து போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு

பாபநாசம், செப்.22 -  முதலமைச்சர் கோப் பைக்கான கைப்பந்து  போட்டி பிள்ளையார்பட்டி யில் நடந்தது. இதில் பாப நாசம் அரசினர் ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் 2 ஆம் இடம் பெற்றதுடன், பங்கேற்ற 13  பேரும் தலா ரூ.2 ஆயிரம் பரிசு பெற்றனர். ஸ்கூல் கேம்ஸ் பெட ரேஷன் ஆப் இந்தியா போட்டி திருச்சியில் நடந்தது. இதில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி பிளஸ் 2  மாணவர் நவீன்குமார் கைப் பந்து போட்டியில்  தேர்வாகி மாநில அளவி லான போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளார். போட்டியில் வென்ற மாண வர்களை பள்ளித் தலை மையாசிரியர் மணியர சன், உதவித் தலைமையா சிரியர் லோகநாதன், உடற் கல்வி ஆசிரியர் செல்வ குமார், என்.சி.சி அலுவ லர் சரவணன் ஆகியோர் பாராட்டினர்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பாபநாசம், செப்.22 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோயில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பள்ளி  மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இதில் தலைவராக சரண்யா, துணைத் தலைவராக மகேஸ்வரி உள்ளிட்ட உறுப் பினர்கள் தேர்வாகினர். இதில் ஆசிரியப் பயிற்றுநர் பவுல் ஆரோக்கியராஜ், தமிழ்ச்செல்வன், ஊராட்சித் தலைவி ரேவதி, வார்டு உறுப்பினர் வசந்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் நித்தியானந்தம், பிடிஏ தலைவர் செல்வம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.     

மதிப்பு கூட்டுதல் பயிற்சி

பாபநாசம், செப்.22 - அட்மா திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ் தலம் அருகே திருமண்டங் குடியில் வேளாண் விளை பொருட்களில் மதிப்பு கூட்டு தல் பயிற்சி நடந்தது. ஊராட்சித் தலைவர் பிரபா கரன் தலைமை வசித்தார். வேளாண் அலுவலர், வேளாண் விற்பனை, வணிகத் துறை தாரா பயறு வகை பயிர்களில் மதிப்பு கூட்டுதல், சந்தைப் படுத்துதல் குறித்து கூறி னார். வேளாண் அலுவ லர் நடராஜன் மாநிலத் திட்டங்கள், உயிர் உரங்க ளின் பயன்கள், மானிய விலையிலான உயிர் உரங்கள் பற்றி கூறினார். துணை வேளாண் அலுவ லர் எபினேசன் பாரம்பரிய நெல் ரகங்கள், அதன் மதிப்பு கூட்டுதல் பற்றி கூறினார். 

லாட்டரி விற்பனை: 4 பேர் கைது

அறந்தாங்கி, செப்.22 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசகுளம் கீழ்பாதி  பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனையில் ஈடு படுவதாக மாவட்ட கண்கா ணிப்பாளர் தனிபிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற  காவலர்கள், அங்கு விற்ப னையில் ஈடுபட்ட சேக் முக மது (40), செந்தில்குமார் (52), துரைமுருகன் (47), சுரேஷ் (40) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கைப்பேசிகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள், 4300 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப் பற்றி நாகுடி காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

பாபநாசம், செப்.22 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 8 ஆவது மாவட்டப் பேரவை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப் பினர் ராஜகோபாலன் கொடியேற்றினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த பேரவைக்கு மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி மேனாள் மாநிலச்  செயலர் ரவிச்சந்திரன் துவக்கவுரையாற்றி னார். தென் மண்டல இன்சூரன்ஸ் கூட்ட மைப்பு மேனாள் பொதுச் செயலர் சுவாமி நாதன் கருத்துரையாற்றினார்.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தமிழக அரசு அறிமுகப் படுத்திய புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்  அனைத்து சிகிச்சைகளையும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் செய்து கொள் ளும் அளவு மேம்படுத்த வேண்டும். அடிப் படை ஓய்வூதியத்தில் ஒரு மாத ஓய்வூதி யத்தை போனசாக அறிவிக்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10  சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.  பூதலூரில் சார்நிலை கருவூலம் ஏற்படுத்திட வேண்டும். திருவையாறு சார்  நிலைக் கருவூலம், திருவையாறு வட்டாட்சி யர் அலுவலக வளாகத்திற்குள் செயல்பட வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் பாதுகாப்பு நிதியை ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலப் பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

கும்பகோணம் செப்.22 - கும்பகோணத்தை புதிய மாவட்ட மாக அறிவிக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டக் கிளை 16 ஆவது  மாநாடு கும்பகோணத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலை வர் பொ.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் (பொ) பி.முருகன் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார்.  ‘ஊழியர் விரோத ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ என்ற தலைப் பின்கீழ் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை துறை பணி மன்றம் மாநிலத் தலைவர் பி.அம்பேத்கர் கருத் துரை ஆற்றினார். மாநில செயலா ளர் கோதண்டபாணி நிறைவுரை யாற்றினார். இம்மாநாட்டில், கும்ப கோணம் வட்டத் தலைவராக பொ. வெங்கடேசன், வட்டச் செயலாளராக பிரபாகரன், பொருளாளராக மதிய ழகன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழு  தேர்வு செய்யப்பட்டது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி  உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக் கும் வரையறுக்கப்பட்ட காலமுறை  ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி யுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர் களுக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகையினை உடனே வழங்கிட வேண்டும். கும்பகோணத்தில் அரசு தொழிற் பயிற்சி, அரசு பாலிடெக்னிக் மற்றும்  தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி கள் அமைக்க வேண்டும். கும்பகோணத் தினை தலைமையிடமாகக் கொண்டு ‘கும்பகோணம்’ என புதிய மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் நிறைய பெண் ஊழியர்கள், வெளி மாவட்டங் களில் இருந்து வந்து, கும்பகோ ணத்தில் தங்கி பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. எனவே அவர்கள் தனி யார் விடுதிகளை நாடிச் செல்ல வேண்டி யுள்ளது. அதை தவிர்க்கும் பொருட்டு கும்பகோணத்தில் மகளிர்  தங்கும் விடுதி அமைக்க வேண்டும். கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் பயன்பெ றும் வகையில் நுண்கதிர் வீச்சு துறை யில் நிரந்தர புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு  ஒன்றியத்தில் கிளைச் செயலாளர்கள் தேர்வு

கும்பகோணம், செப்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கிளை  மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 கிளைகளில் முதற்கட்டமாக 8 கிளைகளுக்கு மாநாடு நடைபெற்றது. அதில் திருச்சேறை கிளைச் செயலாளராக டி.என்.ஆறுமுகம், சேத்திகுளம் எஸ்.கண்ணன், சேத்திகுளம் பெண்கள் கிளை செந்தமிழ்செல்வி, ஆரியச்சேரி மணிவேல், ஆரியசேரி (பி) நாகையன், பருத்திச்சேரி என். வீரமணி, மாத்தூர் என்.கண்ணன், ஆண்டாளூர் எம்.கண்ணன் ஆகியோர் கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர் மேற்கண்ட கிளை மாநாடுகளில் சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் மற்றும்  ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவியை பாலியல்  வன்கொடுமை செய்தவர் கைது

புதுக்கோட்டை, செப்.22 - பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான்  தெருவைச் சேர்ந்தவர் டி.விக்னேஸ் (23). தொழிலாளி யான இவர், அரசுப் பள்ளி மாணவி ஒருவரை பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்  அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் விக்னேஸை சனிக்கிழமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஏற்கனவே இதே பள்ளியைச்  சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில், வேறொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே பள்ளியில் அடுத்தடுத்து 2 மாணவிகள் வெவ்வேறு  நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டது குறித்து கல்வித்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

சுக்கிரன்குண்டு, அறிவொளி நகரில் புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை, செப்.22 - புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுக்கிரன்குண்டு கிராமம் மற்றும் கீரமங்கலம் பேரூராட்சி, அறிவொளிநகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா  வழங்குவது குறித்தும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது  குறித்தும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா வியாழக் கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், ஆலங்குடி வட்டம், புளிச்சங்காடு கிராமம், சுக்கிரன்குண்டு பகுதியில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன. மீதமுள்ள 22 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், சுக்கிரன்குண்டு பகுதி மற்றும் கீரமங்கலம் பேரூராட்சி, அறிவொளிநகர் பகுதிகளில் உள்ள பள்ளி  குழந்தைகள் சீராகப் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலும்  வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர் புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

இலவச மருத்துவ  பரிசோதனை முகாம்

பெரம்பலூர், செப்.22 - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலு வலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்து வப் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் தன லட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கான இலவச மருத்துவப் பரிசோ தனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமினை  மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்துப்  பார்வையிட்டார். முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியா ளர்களுக்கு பொது சுகாதாரப் பரிசோதனை, உயர் இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை, கண்  பரிசோதனை, எலும்பியல் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பிரிவு, பல் மருத்துவம், தோல் நோய், இருதய  நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனை கள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் 211 அரசு ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.

டிச.10 சென்னையில் தர்ணா: அங்கன்வாடி ஓய்வூதியர்கள் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, செப்.22 - தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், உடனடியாக ஓய்வூதியத்தை உயர்த்துவது, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நலநிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 12 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 10 அன்று சென்னை மாநகரில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநிலத் தலைவராக கே.பழனிச்சாமி, பொதுச் செயலாளராக பி.ராமமூர்த்தி, மாநிலப் பொருளாளராக சி.ராமநாதன், மாநில துணைத் தலைவர்களாக கே.ஆண்டாள், கே.சத்தி, ஜி.தாண்டவமூர்த்தி, எஸ்.ராமசுப்புராஜ், பி.சித்ரசெல்வி, எஸ்.கிரேஸ்சசிகலா, பி.அய்யங்காளை, மாநிலச் செயலாளர்களாக கே.எம்.ராஜேந்திரன், ஜே.எஸ். விஜயகுமார், பி.பாண்டி, பி.சுந்தரம்மாள், வி.சுப்பிரமணியன், எஸ்.சூரியமூர்த்தி, கே.சேஷாம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரே நாடு ஒரே தேர்தலால்  மக்களுக்கு பயன் கிடையாது

தஞ்சாவூர், செப்.22 -  ஒன்றிய அமைச்சரவை யில் ஒப்புதல் கொடுக்கப் பட்டுள்ள, “ஒரே நாடு ஒரே தேர்தலால்” மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.  தஞ்சாவூரில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற கலைஞர் 100 வினாடி வினா  நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததா வது:  தூத்துக்குடி ஸ்டெர் லைட் துப்பாக்கிச் சூடு சம்ப வத்தில் குற்றம் சாட்டப்பட்ட  அலுவலருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக் கப்படும். அப்படியொரு தவறு நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக தீர்வு காணப் படும்.  ஒரே நாடு ஒரே தேர்த லுக்கு ஒன்றிய அமைச்ச ரவைதான் ஒப்புதல் கொடுத் துள்ளது. நாடு இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து திமுக மற்றும் தமிழக முதல்வரின் நிலைப் பாடு என்ன என்பது அனை வருக்கும் தெரியும். இதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே மொழி என  எல்லாவற்றுக்கும் ஒரே  நாடு என கூறிக் கொண்டி ருக்கின்றனர். மாநிலங் களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் செயல்படு கின்றனர்.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறபோது, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி களின் 5 ஆண்டு காலம் முடி யாத போது அவற்றின் நிலை  என்னவாகும்? அவற்றால் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய பயன் என்ன? எந்தப் பயனும் இல்லாதபோது, தங்களுக்கு எது லாபம் தரும் என நினைத்து அவர் கள் செய்வதை திமுக நிச்சயமாக எதிர்க்கும். இதுபோல பாஜகவினர் தாங்கள் நினைக்கும் கருத் துகளை நாட்டு மக்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். இதற்கு திமுகவும் தமிழக முதல்வரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்த நாட்டின் ஜன நாயகத்துக்கும், மாநில உரி மைகளுக்கும் எதிரான எதை யும் ஏற்றுக் கொள்ள மாட் டோம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தேசிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டியவை ஜோதிமணி எம்.பி., கருத்து

புதுக்கோட்டை, செப்.22 - போதைப் பொருட்களுக்கான தடுப்பு நட வடிக்கைகள் தேசிய அளவில் மேற் கொள்ளப்பட வேண்டியவை என்றார் கரூர்  தொகுதி மக்களவை உறுப்பினர் செ.ஜோதி மணி.   புதுக்கோட்டை களமாவூரில் சனிக்கிழமை  நடைபெற்ற மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர்  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கரூர் மக்களவைத் தொகுதி மக்க ளுக்கும் புற்றுநோய்ப் பரிசோதனை மேற் கொள்ள வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இப்போது, மாநிலம் முழுவதுமே பரிசோதனை மேற் கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இதற்கு நன்றி தெரிவிக்கிறேன். போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டாயம் தடுக்க வேண்டும். காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும். மது ஒழிப்புக்காக விடுதலைச்  சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டை வர வேற்கிறேன். கொள்கை அளவில் மது விலக்கை திமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் திமுக தலைவர்கள் பங்கேற் கிறார்கள்.  போதைப் பொருட்களுக்கான தடுப்பு நட வடிக்கைகள் தேசிய அளவில் மேற்கொள் ளப்பட வேண்டியவை. குஜராத்திலுள்ள அதானியின் துறைமுகத்தில் காணாமல் போன போதைப் பொருள் குறித்து இது வரை யாரும் வாய்த் திறக்கவே இல்லையே,  ஏன்? இதையும் சேர்த்தே பார்க்க வேண்டும்  என்றார்.