districts

வடபாதி கிராமத்தில் விதை உற்பத்தி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

அம்மாபேட்டை, செப்.22 -  அம்மாப்பேட்டை வட்டாரத்தில் விதை உற்பத்தி பதிவு செய்யும் விவ சாயிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை மூலம் ஒருநாள் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டை அருகே வடபாதி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில்  அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் மோகன் பயிற்சியினை துவக்கி வைத் தார். அத்துடன், விதைப் பண்ணை விவ சாயிகளுக்கு விதை உற்பத்தி மற்றும் விதை சேமிப்பின் முக்கியத்துவம், நெல்  அறுவடைக்குப் பிறகு பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு, மடக்கி உழவுச் செய்யும் பழக்கத்தை கடைப்பிடித்து மண்ணின் வளத்தை மேம்படுத்தி, தரமான விதை உற்பத்திச் செய்து பயன் பெறலாம் என்றார்.  விதைப் பண்ணை பதிவு செய்யும்  முறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விதையின் முக்கியத்துவம் குறித்து தஞ்சாவூர், விதைச் சான்று அலுவலர் சங்கவி பேசினார். அம்மாப் பேட்டை விதைச்சான்று அலுவலர் பிரபு, விதைப் பண்ணையில் ஒவ்வொரு  கட்டத்திலும் கலவன்கள் அற்ற விதை களை உற்பத்திச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறினார். தஞ்சாவூர் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன்,  விதைப் பண்ணைகளில் விதை  உற்பத்தியினை அதிகரிப்பதற்குண் டான தொழில்நுட்பங்கள், களைக் கொல்லிகளை பயன்படுத்தும் முறை,  ரசாயன உரங்களை அளவுக்கு அதிக மாக ஈட்டுவதை தவிர்த்து, சமச்சீரான உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை அதிகளவு பயன்படுத்தும் முறை, பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், அறுவடை மற்றும் அறுவடைக்கு பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய தரங்கள், விதையின் முளைப்புத் திறன்  மற்றும் பிறரக கலவன்கள் இல்லாமல் விதை உற்பத்தி செய்து விதை உற்பத்தி யினை ஒரு லாபகரமான தொழிலாக மேற்கொள்ளலாம் என்றார்.