tamilnadu

img

சமூக பாதுகாப்புடன் கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக

சென்னை, செப். 22- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2இன் இரண்டு  நாள் மாநாடு வேப்பேரி யில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை (செப். 21, 22) நடைபெற்றது. சங்கக் கொடியை தலை வர் கே.மனோகரன் ஏற்றி வைத்து பொது மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா ளர் கே.வேணுகோபால் பொது மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் இணைச் செய லாளர் எம்.கிரிஜா, சென்னை கோட்டம் 2இன் முதுநிலை பிரிவு மேலாளர் ஜி.குமார், எல்ஐசி கிளாஸ் 1 சென்னை கோட்டம் 2இன் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம், இந்திய இன்சூரன்ஸ் களப் பணியாளர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நாரா யணன், சென்னை கோட்டம் 1 இன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கோட்டம் 2இன் பொதுச் செயலாளர் டி.கே.வெங்க டேசன், எல்ஐசி பென்ஷ னர்ஸ் அசோசியேசன் சென்னை கோட்டம் பொது ச்செயலாளர் எஸ்.சந்தா னம், ஆனந்தன் (ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இணை ச்செயலாளர் என்.விஸ்வ நாதன் நன்றி கூறினார். தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் இணைச் செயலா ளர் ஆர்.கே.கோபிநாத் பிரதி நிதிகள் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆர்.சர்வமங் களா வேலை அறிக்கை யையும், பொருளாளர் பி.எம்.ரமேஷ் வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப்பித் த்தனர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் பொதுச்செய லாளர் டி.செந்தில்குமார், துணைத் தலைவர் எம்.கே.முத்துகுமாரசுவாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். “ஊழியர்களை பாதுகாக்கும் ஓய்வூதிய திட்டம் எது பழைய, ஓய்வூதிய திட்டமா, புதிய ஓய்வூதிய திட்டமா, யூனி பைடு ஓய்வூதிய திட்டமா” என்ற தலைப்பில் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் சி.பி.கிருஷ்ணன் பேசினார். இதில் தென்மண் டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், உதவி பொருளாளர் வி.ஜானகி ராமன், நிர்வாகி சிவசுப்பிர மணியம் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். தீர்மானங்கள் 85 விழுக்காடு உறுப்பி னர்களைக் கொண்டுள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும், எல்ஐசியில் 3 மற்றும் 4ஆம் பிரிவு ஊழியர்களுக்கான புதிய பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும், எல்ஐசி-யின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செலுத்தும் முகவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும், பாலிசி தாரர்களுக்கு சிறப்பான  சேவை வழங்க கிளை களுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்ட மைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக கே.மனோ கரன், செயலாளராக ஆர்.சர்வமங்களா, பொருளா ளராக பி.எம்.ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.