tamilnadu

img

2300 காலிப் பணியிடங்களை நிரப்புக!

சென்னை, செப். 22 - ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனின் (சிஐடியு) 49ஆவது பொது மகாசபை சனிக்கிழமையன்று (செப்.21) ஐசிஎப் வடக்கு காலனி மருதம் நன்னல மையத்தில் நடை பெற்றது. ஐசிஎப் தொழிற்சாலைக்குள் டிட்டாகர் என்ற பன்னாட்டு நிறுவனம், வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டி களை உற்பத்தியை செய்ய ஒன்றிய பாஜக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடி  வெற்றி பெற்றனர். இதற்கு உறுதுணையாக செயலாற்றிய சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐசிஎப்-ல் உள்ள 2300, இந்திய ரயில் வேயில் உள்ள 3.50 லட்சம் காலியிடங் களை உடனே நிரப்பிட வேண்டும், உத்தர வாதமான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும், ஐசிஎப் பணியாற்றும் தூய்மை பணியா ளர்கள், ரயில் பெட்டிகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலை வரை பணியாற்றும் 4000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தின் முதல் வாரத்தில்  சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும், மேலும், தீபாவளி போனஸ் வழங்க முதன்மை வேலையளிப் பவரான ஐசிஎப் நிர்வாகம் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மான ங்களும் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் சி.சத்தியமூர்த்தி, ஆலோசகர்கள் என்.வி.கிருஷ்ணாராவ், வி.மோகன் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற மகாசபையை சிஐடியு மத்திய சென்னை மாவட்ட தலைவர் எம்.தயாளன்  தொடங்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் பா.ராஜாராமன் வேலை மற்றும் அமைப்பு அறிக்கை முன்வைத்தார். டிஆர்இயு செயல் தலைவர் அ.ஜானகி ராமன் சிறப்புரையாற்ற சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை நிறைவுரை யாற்றினார். நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் சி.சத்தியமூர்த்தி, செயல் தலைவர் பா.ராஜாராமன், பொதுச் செயலாளராக கே.டி.ஜோஷி, பொருளாளர் ஜி.நடராஜன், இணைப் பொதுச் செயலாளர் ந.வேலாயுதம் உள்ளிட்ட 15 மத்திய சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி கவிஞர் தமிழ் ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா - காலை 10.30 மணியளவில் பவள விழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை எதிரே) - பங்கேற்பு: அமைச்சர் க.பொன்முடி, ஔவை ந.அருள், ச.ஏழுமலை, ஆ.ஏகாம் பரம், கோ.பழனி, மதுக்கூர் ராமலிங்கம், சிகரம் ச.செந்தில்நாதன், இரா.தெ.முத்து, சைதை ஜெ. மற்றும் பலர் - ஏற்பாடு: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் கவிஞர்  தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு.