tamilnadu

img

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை

புதுக்கோட்டை, செப்.22 - மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்ப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்து வப் பணிகளுக்கான பல்வேறு கட்ட டங்களைத் திறந்து வைத்து அவர் பேசிய தாவது: ஈரோடு, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 4  மாவட்டங்களில் புற்றுநோய்ப் பரிசோ தனை மேற்கொள்வதற்காக 13 லட்சம் பேருக்கு அழைப்புவிடுத்தோம். 8  லட்சம் பேர் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டனர். இவர்களில் 107 பேருக்கு  புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக்  கண்டறிவதன் மூலம் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் சிகிச்சை மேற் கொள்ள முடியும். இதேபோல, மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்ப் பரிசோதனை மேற் கொள்வதற்காக முதல்வரின் அனுமதி பெற்று, திட்ட மதிப்பீடு தயாரிக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநி லம் முழுவதும் 2553 மருத்துவர்களை நிய மனம் செய்வதற்கான தேர்வுப் பணிகள் முடிந்துள்ளன. ஓரிரு மாதங்களில் மருத்து வர்கள் நியமிக்கப்படுவார்கள். அப்போது மருத்துவர் பற்றாக்குறை என்ற  பிரச்சனை இருக்காது. மாரடைப்பு ஏற்படும் போது உயிரி ழப்பைத் தடுப்பதற்காக மாநிலம் முழு வதும் சுமார் 11 ஆயிரம் மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் போதுமான அளவு முன்தடுப்பு மாத்திரைகள் இருப்பில் உள்ளன. மாரடைப்பு அறிகுறிகளுடன் வருவோருக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. கீரனூர் அரசு மருத்துவமனை, கடந்த  ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், போதுமான மருத்துவர் பணியி டங்கள் உருவாக்கப்படவில்லை. வெறு மனே பெயர்ப்பலகை வைத்துவிட்டால் மட்டும் போதாது. மருத்துவப் பணியி டங்களை உருவாக்க வேண்டும். இதே போல மாநிலத்தின் பல அரசு மருத்துவ மனைகளிலும் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். மேற்படி விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித் தார். கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பி னர் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சின்னதுரை (கந்தர்வ கோட்டை), வை.முத்துராஜா (புதுக் கோட்டை) முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட சுகாதார அலுவலர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந் தாங்கி), ஒன்றியக் குழுத் தலைவர்கள் காமு முபி.மணி (விராலிமலை), சுதா அடைக்கலமணி (பொன்னமராவதி), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி),  வள்ளியம்மை தங்கமணி (திருவரங் குளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டையில் ‘சீமாங் சென்டர்’ அமைக்கப்படும்
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, தனது தொகுதிக் கான சில கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகை யில் பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்ன துரை இங்கு சில கோரிக்கை கள் குறித்துப் பேசினார். கடந்த ஆட்சி காலத்தில் கீர னூர், கறம்பக்குடி அரசு மருத்து வமனைகள் தரம் உயர்த்தப் பட்டதாக வெறும் பலகை மட்டுமே வைக்கப்பட்டது. அதற் கான உள்கட்டமைப்பு வசதி களோ, போதுமான மருத்துவர் மற்றும் ஊழியர்களோ நிய மிக்கப்படவில்லை.  இதுகுறித்து சின்னதுரை எனது கவனத்திற்கு கொண்டு வந்தார். உடனடி யாக கறம்பக்குடி மருத்துவ மனையில் நேரடியாக ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு, போது மான மருத்துவர்கள் மற்றும்  உபகரணங்கள் ஏற்படுத்தப் பட்டன. மேலும், எம்.எம்.அப்துல்லா எம்.பி.,யின் மாநி லங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2  கோடி, சின்னதுரையின் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி என 3  கோடி ரூபாய் மதிப்பில் விரை வில் அங்கு கட்டுமானப் பணி கள் நடைபெற உள்ளன. கீரனூர் அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள  குறைகளை கேட்டறியப்பட்டது. விரைவில் அங்குள்ள பற்றாக் குறைகளும் சரிசெய்யப்படும். அதேபோல கந்தர்வ கோட்டையில் பிரசவத்தின் போது தாய்-சேய் மரணங் களைத் தடுத்து உயர்சிகிச்சை அளிக்கும் வகையில் 24 மணிநேரமும் இயங்கும் ‘சீமாங் சென்டர்’ தொடங்கப் படும். இதற்கு முதல்கட்டமாக ரூ.3 கோடி மதிப்பில் அங்கு கட்டுமானப் பணிகள் நடை பெறும்” என்றார்.