games

img

விளையாட்டு...

சென்னை டெஸ்ட்    -  வெற்றியின் விளிம்பில் இந்தியா

வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தி யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொ டக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் தமிழ் நாடு தலைநகர் சென்னையில் வியாழ னன்று தொடங்கியது.  டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி அஸ்வினின் (113) அபார சதத்தின் உதவி யால், முதல் இன்னிங்சில் 91.2 ஓவர்க ளில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி தரப்பில் ஹாசன் மகமூத் அதிகப்பட்சமாக 5 விக்கெட்டு களை வீழ்த்தினார். வங்கதேச அணி தனது முதல் இன் னிங்ஸில் பும்ரா (4 விக்கெட்டுகள்), சிராஜ் (2 விக்கெட்டுகள்), ஆகாஷ் தீப் (2 விக்கெட் டுகள்), ஜடேஜாவின் (2 விக்கெட்டுகள்) தாக்குதல் அடங்கிய பந்துவீச்சை சமா ளிக்க முடியாமல் 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி தரப்பில் சாகிப் அல் ஹாசன் 32 ரன்கள் எடுத்தார்.  227 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை தொ டங்கிய இந்திய அணி, நிதான ஆட்டத் துடன் 64 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து, வங்கதேச அணியின் வெற்றி இலக் காக 515 ரன்கள் நிர்ணயம் செய்தது. 515 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி அஸ்வின்  பந்துவீச்சில் கடுமையாக திணறி மிடில் ஆர்டரை இழந் தது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்க தேச அணி 37.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது. சன்டோ (51), சாகிப் (5) ஆகியோர் களத் தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலை யில், இந்திய அணி நிர்ணயித்த பிரம் மாண்ட இலக்கை வங்கதேச அணி யால் எட்ட முடியாது. அதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. தொடர்ந்து ஞாயிறன்று காலை 9:30  மணியளவில் 4ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் கோப்பையை காணவில்லையா?

இந்தியாவிற்கு சிக்கல்

கடந்த 2022இல் தமிழ்நாடு அரசு சென்னை அருகே மகாபலிபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகளுக்கு உலக நாடுகள் பலத்த பாராட்டுகளை தெரிவித்த நிலையில், இந்த செஸ்  ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணிக்கான “நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பையை” வென்று இருந்தது. அந்த கோப்பையை இரண்டு ஆண்டுக ளுக்கு மட்டுமே வெற்றி பெற்ற அணி வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், அடுத்த செஸ் ஒலிம்பியாட் தொடரின்  போது கோப்பையை மீண்டும் சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது ஹங்கேரியில் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்தியாவிடம் உள்ள அதே “நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பை” வழங்கப்படும். அந்த வகையில் 2022 செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வென்ற “நோனா கப்ரிந்தாஷ்விலி கோப்பையை” ஒப்படைக்குமாறு சர்வதேச செஸ் கூட்டமைப்பு சில வாரங்களுக்கு முன் கேட்டது. அப்போது தான் அந்த கோப்பை காணாமல் போன விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் (AICF) முந்தைய நிர்வாகிகள் விலகி, தற்போது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முந்தைய நிர்வாகத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில்,  இந்தியா வென்ற “நோனா கப்ரிந்தாஷ்விலி” கோப்பையையும் காணவில்லை. தில்லி மற்றும் சென்னையில் உள்ள அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடந்தது. கடைசியாக சென்னை ஹோட்டல் ஒன்றில் அந்த கோப்பை இருந்துள்ளது. அங்கும் தேடுதல் நடத்தப்பட்டது. முந்தைய செஸ் கூட்டமைப்பு அலுவலகப் பொறுப்பாளர்களைத் தொ டர்பு கொண்டும் கேட்கப்பட்டது. செஸ் வீரர்களிடம் கூட கோப்பை குறித்து கேட்கப்பட்டது. ஆனால், யாருக்கும் அந்த கோப்பை எங்கே உள்ளது என்பது தெரியவில்லை. 2022 செஸ் ஒலிம் பியாட் தொடரை நடத்திய தமிழ்நாடு அரசிடமும் இது குறித்து கேட்கப்பட்டு உள்ளது. தற்போது காவல்துறை இந்த கோப்பை குறித்து தீவிரமாக சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவதற்குள் அந்த கோப்பை கிடைக்காமல் போனால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கவுரவத்துக்கு குந்தகம் ஏற்படும்.