நாகர்கோவில், ஜூலை 7- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் அஜித் (20). வண்டி குடியிருப்பை சேர்ந்தவர் அர்ஜூனன் (17). இவர்கள் வண்டி குடி யிருப்பு பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்ற னர். அங்கு இவர்களுக்கும் சில ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் இருவரும் நாகர்கோவில் அருகே சித்திரை திரு மகராஜபுரம் என்ற இடத்தில் கால்வாய் கரை யில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வழி மறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை செய்யப்பட்ட இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.