மதுரை, நவ. 21 - அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரி யத் தலம் அமைந்துள்ள பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்ப தற்கான ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறு வனத்திற்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு கடிதம் ஒன்றையும் சு.வெங்கடேசன் எம்.பி. எழுதியுள் ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்ப தாவது: கனிமச் சுரங்கத்திற்கு ஏலம் விடப்பட்ட அரிட்டாபட்டி பகுதி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கி யத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள டங்க்ஸ்டன் கனி மத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7-ஆம் தேதி வெளியிட்ட (pib.gov.in/PressReleasePa…) செய்திக்குறிப்பின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ள 2015.51 ஹெக்டேர் கனிமத் தொகுதியானது, பல்வேறு சூழல் மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். 2022 நவம்பர் 22 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மாநில சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங் களுக்கான துறை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டத்தின் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதி யை அறிவித்தது. இந்த பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியைச் சேர்ந்த மொத்தப் பரப்பும் தற்போது ஏலம் விடப்பட்டுள்ள கனிமத் தொகுதியின் 2015.51 ஹெக்டேர் பரப்பிற்குள் வருகிறது
வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அடையாளங்கள்
ஏலத்தில் விடப்பட்ட இந்த கனிமத் தொகுதிக்குள் தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்றுச் சின்னங் கள் அமைந்துள்ளன. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற் காலத்தைச் (megalithic) சேர்ந்த சின்னங்கள், 2200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டுகள், சம ணர் படுக்கைகள், சங்ககால பாண்டி யர்களால் கொடையளிக்கப்பட்ட கற் படுக்கைகள், குடைவரைக் கோயில்கள் என தமிழ்நாட்டு வர லாற்றின் தனித்துவமான அடையாளங் களை தாங்கி நிற்கும் இடமாக இது அமைந்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட கோவில்கள், 200 ஆண்டுகள் பழமையான தர்கா உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. சூழல் மற்றும் வழி பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் நாட்டின் பெருமைமிகு அடை யாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி கனிமத் தொகுதியின் எல்லைக் குள் உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏழு சிறுகுன்றுகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இப்பகுதியில் வெள்ளை வல்லூறு (Laggar Falcon), செம்மார்பு வல்லூறு (Shaheen Falcon), ராசாளிக் கழுகு (Bonelli’s eagle) உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு (Pan golin), மலைப்பாம்பு (Python), தேவாங்கு (Slender Loris) போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலப்பரப்பை சுரங்கம் அமைப்பதற்கான ஏலப்பட்டியலில் சேர்த்ததே மிகவும் தவறாகும். இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சூழல் மற்றும் வர லாற்றுத் தொன்மை வாய்ந்த நிலப் பரப்பு அழியும் என்பதாலும் வேளா ண்மை, மேய்ச்சல் உள்ளிட்டவையும் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடுமையான சூழல் சீர்கேடு கள் ஏற்படும் என்பதால் இக்கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலத்தில் வழங்கி யதை ரத்து செய்வதோடு அடுத்த கட்ட ஏலங்களிலும் இப்பகுதியை இடம் பெறச் செய்யக்கூடாது என துறை அதி காரிகளுக்கு உத்தரவிடுமாறு தங்களைக் கோருகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.