புதுதில்லி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் (ஏடிஎம்எம் பிளஸ் - ADMM Plus) அங்கம் வகிக்கும் “ஆசியான் பிளஸ் (ASEAN PLUS)” மாநாடு (பேச்சுவார்த்தை பிரிவு நாடுகள் மட்டும்) லாவோஸ் நாட்டின் தலைநகர் வியண்டியானில் நடை பெற்றது. இந்தியா, சீனா, ஆஸ்திரே லியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 3 நாள் நடைபெற்ற இந்த ஆசியான் பிளஸ் மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பென்கே ஆகியோர் சந்தித்து இருநாட்டின் நல்லுறவு தொடர்பாக விவாதித்தனர். இரு பாதுகாப்பு அமைச்சர்களும் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு பொருத்தமான தீர்வை கண்டறிய வேண்டும் என ஒப்புக்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டு, எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டு தலை உருவாக்க முடிவு செய்தனர். இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே யான இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக் கையை மீட்டெடுக்கவும், பிணக்கு களை தீர்க்கவும் முக்கிய தேவையா கும். எதிர்கால ஒத்துழைப்பை மேம் படுத்துவதற்கான திட்டத்தை வகுப்பது, இந்திய-சீன உறவுகளை மேம்படுத்துவ தற்கான பாதையை கணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்குப் பின் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “இரு நாடுகளும் இணைந்து பரஸ்பர நம்பிக்கையையும், புரிந்துணர்வையும் மீட்டெடுக்க ஒப்புக்கொண்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் நிகழ்ந்த வேதனைக்குரிய எல்லை மோதல்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் வருவதை தடுப்பதற்கும், இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் சமாதானம் மற்றும் சுதந்தி ரத்தை பாதுகாப்பதற்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்தியா - சீனா என இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு உள்ளதை வலியுறுத்தி, இது உலகளா விய சமாதானம் மற்றும் செழிப்பிற்கான சாதகமான விளைவுகளை கொண்டி ருக்கும். அதனால் இரு நாடுகளும் அண்டை நாடுகளாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மோதலை விட ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப் பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.