லக்னோ பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யின் குழந்தை பிரிவு அவசர சிகிச்சை பிரிவில் நவம்பர் 15 அன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தனர். அதில் 10 குழந்தைகள் தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். 44 குழந் தைகள் உயிருடன் மீட்கப்பட் டன. அதில் 7 குழந்தைகள் பலத்த தீக்காயத்துடனும், 16 குழந்தைகள் லேசான காயத்துடனும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழந்தன. தொ டர்ந்து புதன்கிழமை இரவு மேலும் 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியாகின. இதன் ன்மூலம் ஜான்சி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை தீ விபத் தில் உயிரிழந்த குழந்தைக ளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந் துள்ளது. படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் மேலும் 2 குழந்தை களின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்து வக் கல்லூரி மருத்துவமனை நிர் வாகம் கூறியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் சூழல் உருவாகியுள்ளது.