tamilnadu

img

500 மனுக்களுக்கு பதிலே வரவில்லை

திண்டுக்கல், நவ.21- ஒன்றிய பாஜக அரசிடமிருந்து 500 மனுக்களுக்கு பதிலே வரவில்லை என்று திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு -கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் புகார் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வியாழ னன்று நடைபெற்ற இக்குழுவின் தலை வரும் திண்டுக்கல் மக்களவை உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். வேட சந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கல்வித்துறையில்...

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்று பேசினார். அப்போது குறுக்கிட்ட மக்களவை உறுப் பினர் சச்சிதானந்தம் பேசுகையில், 15 வட்டார வள மையங்களில்  எஸ்.எம்.சி., எஸ்.எம்.டி.சி எலிமெண்டரி, ஐ.டி.கே. தன்னார்வத் தொண்டர்கள், ஆர்.பி.எஸ். 54 விழுக்காடு பயிற்சி முகாம்கள் நடத்தப்படாமல் உள்ளதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதன்மை கல்வி அலு வலர் 4வது காலாண்டு இறுதியில் அனைத்து பயிற்சி முகாம்களும் நடந்து  முடிந்துவிடும் என்றார்.  மேலும் ஸ்ரீராமபுரம் நடுநிலைப் பள்ளி ஒழுகுகிறது; ஆயக்குடி பள்ளி  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது; கோபால்பட்டியில் உள்ள அரசு பள்ளி யில் 16 வகுப்பறைகள் ஒழுகுவதாக வந்த புகாரின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். இவை பற்றி ஆட்சியரிடம் தெரிவித்திருந்தேன் என்று சச்சிதானந்தம் கூறினார்.  ஆயக்குடி ஆரம்பப்பள்ளிக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்தும், கோபால்பட்டி மேல்நிலைப்பள்ளிக்கு பொதுப்பணித்துறையின் நிதியி லிருந்தும், கட்டுமானப்பணிகள் நிறை வேற்றப்பட உள்ளன என்றும், ஸ்ரீராம புரம் நடுநிலைப்பள்ளிக்கும் மராமத்துப் பணிகள் துவங்க உள்ளதாகவும் முதன் மை கல்வி அலுவலர் பதிலளித்தார். வேளாண் துறையில்... வட்டார அளவில் எந்தெந்த பள்ளிக்கு என்ன தேவை என்று எஸ்.எம்.டி.சி. செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விவரங் களை சேகரித்து கொடுக்க வேண்டும். வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மண் வளம் ஆய்வு செய்து  மண் வள அட்டைகள் விவசாயி களுக்கு வழங்கும் திட்டத்தில் ரெட்டி யார்சத்திரத்தில் 60 விழுக்காடும்,  ஒட்டன்சத்திரத்தில் 67 விழுக்காடும், பழனியில் 69 விழுக்காடும் மற்றும் தொப்பம்பட்டியில் 49 விழுக்காடும் என  மாவட்டத்தில் 69 விழுக்காடு அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எதனால் இந்த மந்தம் என்று சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினார். வேளாண் துறை இணை இயக்குநர் காலதாமதமாக வந்த நிலையில், பெண் அலுவலர்  பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆட்சியர் பூங்கொடி. வேளாண் துறை  இணை இயக்குநருக்கு நினைவூட்டல் கடிதம் (மெமோ) வழங்க உத்தர விட்டார். 

3000 விவசாயிகள்தானா?

இதே போல் பிரதம மந்திரி பயிர்  காப்பீடு திட்டத்தில் 3021 விவசாய பய னாளிகளே பயன் பெற்றிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு குறைவான விவ சாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைத்திருக் கிறது? பழனியில் ஒரு விவசாயி, திண்டுக்கல்லில் 24, நத்தத்தில் 28, தொப்பம்பட்டியில் 12, வத்தலகுண்டில் 2 என 2 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான விவசாயிகள் தான் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டார்களா என்று சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பினார். இனி வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  3021 விவசாய பயனாளிகளே இணைந்துள்ளனர். வங்கி மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளில் விவசாய கடன் வாங்குகிற விவசாயிகள் அனை வரையும் பசல் பீமா யோஜனா திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சச்சிதானந்தம் கூறி னார். தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதில் பசல்பீமா யோஜனா திட்டத்தில் அதிக பணம் கேட்பதால் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர தயங்குவதாக விவசாயத் துறை அதிகாரி தெரிவித்தார். 

10 நாள் கூட வேலை இல்லை

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக சச்சிதானந்தம் பேசுகையில், “இத்திட்டத்தில் ஆண்டுக்கு 10 நாட்கள் கூட ஒரு குடும்பத்திற்கு வேலை வழங் காத நிலை உள்ளது. இந்த ஆண்டு அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் திண்டுக்கல் மற்றும் 6 பேரூராட்சிகளில் கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி பணிகள் மந்த நிலையில் நடைபெறுகிறது. உடனடியாக இப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.  பதில் எங்கே? மேலும் அவர் பேசுகையில், எனது அலுவலகத்திற்கு பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் இதுவரை 564 மனுக்களை அது தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பியிருக்கிறேன். இந்த மனுக்களில் 60 மனுக்களுக்கு மட்டுமே பதில் வந்தது. இந்த 60 மனுக் களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை அதிகாரிகள் கொடுத்த பதில். மற்ற 500 மனுக்களுக்கு பதிலே வரவில்லை. ஒரு தனி நபர் புகார் மனு கொடுத்தால் அதற்கு பதில் அளிப்பது அடிப்படைக் கடமை என்பதை நான்  நினைவுபடுத்த தேவையில்லை. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப் படும் மக்களின் மனுக்களுக்கே பதில் இல்லை என்றால் இந்த மனுதாரர்கள் நேரடியாக மனுக் கொடுத்திருந்தால் அந்த  மனுக்களுக்கு பதில் கிடைக்குமா? என்ற ஐயப்பாடு எழுகிறது. எனவே மக்களின் மனுக் களுக்கு மதிப்பளித்து பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்” என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.பேசினார்.