states

img

ஏழைக் குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யக் கூடாது

2024ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடக அரசு பிபி எல் (வறுமைக் கோட்டி ற்கு கீழ்) கார்டு வைத்திருப்பவர்கள் தொடர்பாக கணக் கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப் பில் 22,62,482 தகுதி யற்ற பிபிஎல் கார்டு தாரர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டவர்களும் பிபிஎல் கார்டுதாரர்களாக இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தகுதியற்ற நிலை யில் உள்ள 22.6 லட்சம் பிபிஎல் கார்டு களை ரத்து மற்றும் பறிமுதல் செய்ய  கர்நாடக அரசு சமீபத்தில் உத்தர விட்டது. ஆனால் பிபிஎல் கார்டு ரத்து  நடவடிக்கையில் ஏழைக் குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டாம் என்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.  இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் தவிர மற்ற  ஏழைக் குடும்பங்களின் ரேஷன் கார்டு கள் ரத்து செய்யப்பட்டால், அவற்றை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஏழைக் குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை காரணமின்றி ரத்து செய்தால், உணவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.