நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் ரூ.2,000 கோடி ஊழல் செய்த அதானிக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி - அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
மோடி ஆதரவு ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை விட அதிகமாக 165 தொகுதிகள் வரை மகாராஷ்டிராவில் எம்விஏ கூட்டணி நிச்சயம் வெல்லும்.
ஜார்க்கண்டில் பாஜக பல முக்கிய தலைவர்களை கொண்டு வந்து பிரச்சாரம் மேற்கொண்டது. பாஜக முதல்வர்கள் வெறுப்புப் பேச்சு மூலம் வன்முறையை கிளப்ப முயற்சித்தார்கள். கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு ஆதரவாக திரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
அதானி மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வாடிக்கையான சம்பவமாக உள்ளது. அதனால் அதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தில்லியில் காற்றுமாசு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமா னால் ஒரு சில விமானங்களை ரத்து செய்ய ஒன்றிய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
“வெறும் நான்காண்டுகளில் ரூ.2200 கோடி லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் பிடிபட்டுள்ளார் அதானி. அமெரிக்க நாட்டு நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முன்வந்துள்ளது. அதானி பல முறைகேடுகளில் மோடியின் மூலம் இந்தி யாவில் காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது மீண்டும் தெளிவாகிறது. உடனடியாக விசாரணை தேவை. அதா னியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவ காரத்தை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமை யை செய்யும்” என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டமன்றத் தேர்தலுக்காக முன் கூட்டியே ஆம் ஆத்மி கட்சி 11 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புது விதமான நிபந்தனைகளுடன் சொமோட்டோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கான தலைவர் பதவி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அந்நிறு வனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ளார். அதில்,”தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு முதல் ஆண்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதேபோல, அந்த நபர் ரூ.20 லட்சத்தை முன்தொகையாக, பீடிங் இந்தியா அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அதன்பிறகு, 2ஆவது ஆண்டில் இருந்து வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படுபவர், சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன் மோல், நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, அந்நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.