மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ் டிராவிலும், 81 தொகு திகளை கொண்ட ஜார்க்கண்டிலும் புதன்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலத்திலும் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. அடுத்த சில நிமிடங்களில் தேர்த லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல்) வெளியாகின. வழக்கமாக இந்திய தேர்தல் கருத்துக்கணிப்புகளில் ஆக்சிஸ் மை - இந்தியா, ஏபிபி - சி வோட்டர், லோக் போல், ஜீ (ZEE), இந்தியா டுடே உள்ளிட்ட செய்தி மற்றும் கூட்டு நிறுவங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும். ஆனால் மோடி 2ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு இதுவரை கேள்விப்படாத நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வரு கின்றன. 2023இல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல்கள், 2024 மக்களவை பொதுத் தேர்தல், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட தேர் தல்களில் புதிய நிறுவனங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அதி களவில் வெளியாகியுள்ளன. புதிய கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாக வும், சர்ச்சைக்குரிய வகையில் மட்டுமே இருந்தன. 543 தொகுதிகளுக்கு 600 தொகுதிகள் சமீபத்தில் நிறைவு பெற்ற மக்க ளவை தேர்தலில் “கோடி மீடியா” ஊடகங்கள் மற்றும் புதிதாக முளைத்த கார்ப்பரேட் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் பாஜக விற்காக பல்வேறு உள்ளடி வேலை களை நிகழ்த்தின. அதாவது 400 தொ குதிகளை வெல்வோம் என மோடி கூறினார். அதனை ஒரு கருப்பொரு ளாக வைத்து “கோடி மீடியா”, கார்ப்பரேட் கருத்துக் கணிப்பு நிறு வனங்கள் பாஜகவிற்கு 400 தொகு தியை வழங்குவதற்காக மொத்த தொகுதிகளை (543) விட கூடு தலான தொகுதியை (600க்கும் மேல்) அளவிட்டு, போலிக் கருத் துக்கணிப்புக்களை வெளியிட்டன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போன்று தற்போது மகா ராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்ட மன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளிலும் “கோடி மீடியா”, கார்ப்பரேட் கருத்துக் கணிப்பு நிறு வனங்கள் சர்ச்சையான முடிவுக ளுடன் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளன.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்த லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை 10 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் தைனிக் பாஸ்கர், எலெக்ட்ரோல் எட்ஜ், எஸ்ஏஎஸ், டைம்ஸ் நவ் - ஜேவிசி ஆகிய 4 நிறுவனங்கள் மட்டுமே நீண்ட காலமாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வரும் நிறுவனங்கள் ஆகும். பீப்பி ள்ஸ் பல்ஸ், போல் டைரி, மாட்டி ரிஸ், சாணக்யா, பி-மார்க், லோ க்ஷாய் மராத்தி - ருத்ரா உள்ளிட்ட 6 நிறுவனங்கள் புதிய கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஆகும். டைம்ஸ் நவ் - ஜேவிசி சேர்த்து 6 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் (பெரும்பான் மைக்கு - 145) பாஜக தலைமையி லான மகாயுதி கூட்டணி 150 முதல் 190 தொகுதி வரை வென்று ஆட்சியை கைப்பற்றும் என்றும், எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி 100 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த தைனிக் பாஸ்கர், எலெக் ட்ரோல் எட்ஜ், எஸ்ஏஎஸ் ஆகிய நிறுவனங்கள் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி 130 முதல் 150 தொகுதிகள் வரை வென்று ஆட்சியை கைப்பற்றும் என்றும், மகாயுதி கூட்டணி சராசரி யாக 120 முதல் 140 வரை மட்டுமே வெல்லும் என கூறியுள்ளது. லோக்ஷாய் மராத்தி - ருத்ரா மகா ராஷ்டிராவில் கடும் போட்டி நிலவும் என கூறியுள்ளது.
ஜார்க்கண்ட்
அதே போல 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான, தேர்தலுக்கு பிந் தைய கருத்துக்கணிப்பு முடிவு களை 7 நிறுவனங்கள் வெளி யிட்டுள்ளன. அதில் பீப்பிள்ஸ் பல்ஸ், மாட்டிரிஸ், சாணக்யா, டைம்ஸ் நவ் - ஜேவிசி ஆகிய 4 நிறுவனங்கள் பாஜக 40 முதல் 50 தொகுதிகளை வென்று ஆட்சி யை கைப்பற்றும் என்றும், ஜேஎம் எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 30 முதல் 40 தொகுதிகளை கைப் பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஸ் மை - இந்தியா, பி-மார்க் உள்ளிட்ட 2 நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 40 முதல் 50 தொகுதிகள் வரை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும், பாஜக 15 முதல் 40 தொகு திகளை மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. தைனிக் பாஸ்கர் ஜார்க்கண்ட் ஜேஎம்எம் கூட்டணி, பாஜக இடையே கடும் போட்டி உருவாகும் எனக் கூறியுள்ளது. பாஜக எழுதிக் கொடுத்தது... “கோடி மீடியா” ஊடகங்கள் மற்றும் அரசியல் துறையில் அறி யப்படாத புதிய கார்ப்பரேட் கருத் துக்கணிப்பு நிறுவனங்கள் அனை த்தும் பாஜகவிற்கு மட்டுமே முக்கி யத்துவம் அளித்து தங்களது கருத் துக்கணிப்பு முடிவுகளை வெளி யிட்டுள்ளன. அதாவது பாஜக எழுதிக் கொடுத்ததை கருத்துக் கணிப்பு முடிவுகளாக வெளியிட் டுள்ளது போன்று உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மகாராஷ்டி ரா, ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சா ரங்களில் கூறும் வெற்றிக் கணிப்புத் தொகுதிகள் தான் “கோடி மீடியா” ஊடகங்கள் புதிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது குறிப்பி டத்தக்கது.