world

img

சிரியா-லெபனான் எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியா-லெபனான் எல்லையில் இன்று இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

சிரியாவின் மேற்கு பகுதியில், லெபனான் எல்லையையொட்டி  உள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் பலியானோர் குறித்த விவரங்கள் இன்னும் சிரியா மற்றும் லெபனான் சார்பில் வெளியிடப்படவில்லை.

சிரியா-லெபனான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஹிஸ்புல்லா குழுக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக ஜூசி எல்லைப்பகுதி அறியப்படுகிறது. இந்த எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பதற்றம் நிறைந்த பகுதியாகவே உள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து ஜூசி பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதால் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் சிரியாவின் பால்மைரா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலி 36 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் சிரியா எல்லையில் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.