புதுதில்லி,நவம்பர்.24- அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது , அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியது, விசாரணை தடுத்தது உள்ளிட்ட வழக்குகளில் அமெரிக்க நியூயார்க் நீதிமன்றம் கௌதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தேச நலனைக் கருத்தில் கொண்டு அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் என வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.