states

புல்மெத்தை விரித்து கடற்பசுவை காக்கும் திட்டம்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் வனச்சரகத்தின் கீழ் ஒரு கடல்வாழ் உயிரினத்தை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது. அழியும் ஆபத்தில் உள்ள கடற்பசுக்களை (Dugong) காக்க கடலுக்கு அடியில் புல்மெத்தைகள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் தஞ்சாவூர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பாக் நீரிணைப் பிரதேசத்தில் இவை அதிகம் வாழ்கின்றன. சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி இப்பகுதி யில் 240 கடற்பசுக்கள் உள்ளன. 1972 இந்திய வன உயிரிப் பாதுகாப்பு சட்டத்தின்படி இவை  முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. கடற்புற்களே இந்த விலங்குகளின் முக்கிய உணவு. இந்த தாவரத்தின் பற்றாக்குறை இதன்அழிவுக்கு முக்கியக்காரணம். 2018  நவம்பரில் தமிழக கடற்கரையை தாக்கிய கஜா புயற்காற்றால் கடலுக்கு அடியில் இருந்த புற்கள் சேற்றில் புதைந்து அழிந்தன. உணவு தேடி அலைந்த கடற்பசுக்கள் பல  நேரங்களில் மீனவரின் வலையில் சிக்கிக்  கொண்டன. இவற்றை பாதுகாக்க தமிழக  வனத்துறை தீவிர முயற்சிகளை எடுக்க  ஆரம்பித்தது. 2021 செப்டம்பரில் தமிழ் நாட்டில் புதுக்கோட்டை முதல் தஞ்சாவூர் வரை உள்ல 448 சதுர கிலோமீட்டர் பரப்பை  கடற்பசுக்களின் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவித்தது. நாட்டின் முதல் கடற்பசு  பாதுகாப்பு காப்பகம் இதுவே.

கடினமான பணி

கடலுக்கு அடியில் புல்மெத்தை படுகை களை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் பெரும்  சவால். ஓங்கார் என்ற அறக்கட்டளையும் அதன் தலைவர் மற்றும் கடற்பசு ஆய்வா ளர் பாலாஜியுடன் இணைந்து இத்திட்டத் திற்கு உதவுகிறது. கடலுக்கடியில் சென்று  மூழ்குபவர்களின் உதவியுடன் புற்கள் நடப்படுகிறது. ஆளில்லா சிறிய விமா னங்கள், நீருக்கடியில் இயங்கும் கேமராக்கள்  புல் இல்லாத பகுதிகளை கண்டறிந்து கூறு கின்றன. இது கடல் அலைகள் இல்லாத பகுதி என்ப தால் கடலின் தரைப்பகுதியை அடித்தட்டு வரை தெளிவாக காணலாம். புல் இல்லாத பகுதிகளில் திட்டத்திற்காக  வடிவமைக்கப்பட்ட ப்ரேம்களில் புற்கள் கோர்க்கப்படுகின்றன. கடலுக்கு அடியில்  அவை க்ளாம்புகள் மூலம் பதிக்கப்படுகின்றன. இத்திட்டம் மீனவர்களையும் உட்படுத்தி  செயல்படுத்தப்படுகிறது. கடலுக்கு அடியில் க்ளிப் வைத்த பிறகு புல் வளர்வது கண்கா ணிக்கப்படுகிறது. கயிறு மெத்தையில் புற்களை பதித்து அவற்றை வளர்க்கும் திட்ட மும் பரிசோதிக்கப்படுகிறது. ஆறு மாதங்க ளில் புற்கள் வளர்ந்து இப்பகுதி இயற்கை யான புல் மேடாக மாறும். முன்பு பதித்த புற்கள்  வளரத்தொடங்கியதால் கடற்பசுக்கள் இப்பகுதிக்கு கூட்டமாக வரத்தொடங்கி யுள்ளன.

பாதுகாவலர்களாக மீனவர்கள்

முன்பு இந்த விலங்குகளை வேட்டை யாடிவந்த மீனவர்கள் இப்போது இவற்றின் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர். வலை யில் சிக்கிக்கொள்ளும் கடற்பசுக்களை அவர்கள் காப்பாற்றுகின்றனர். வனத்துறை இதற்கு சன்மானம் வழங்குகிறது. மூழ்கு வதில் கை தேர்ந்த மீனவர்களே கடலுக்கு அடி யில் புற்களை பதிக்கும் பணியை செய்கின்றனர். புற்களை பதிப்பதற்கு இடையில் அரு கிலேயே கடற்பசுக்கள் கடந்து செல்வது மிக  அழகிய காட்சி என்று மூழ்குவதில் நிபுண ரான முருகேசன் கூறுகிறார். பந்நாட்டு கடற்பசு ஆய்வு மையம் இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசு 20  கோடி ரூபாய் நிதியுதவியுடன் தஞ்சாவூ ருக்கு அருகில் மனோரா கடற்கரையில் கடற்  பசு பாதுகாப்பு மையத்தை தொடங்கியுள்ளது.  2025ல் நிறைவுறும்போது இது நாட்டிற்கே ஒரு  முன் மாதிரி திட்டமாக மாறும் என்று ஆய்வா ளர்கள் நம்புகின்றனர். இம்மையம் ஆய்வுகள்  மற்றும் மேற்படிப்புக்காக செயல்படும்.

கடலில் வாழும் விஜிட்டேரியன்

முன்பு இந்த விலங்குகள் கடல் கன்னி  என்று அழைக்கப்பட்டன. கடலில் இளம் பெண் என்று பொருள்படும் மலாய் மொழி யில் இருந்தே டுகாங் என்ற பெயர் இவற்றுக்கு  ஏற்பட்டது. பசுவை போல தாவரங்களை மட்டுமே உண்டு வாழும் இவற்றின் பெயரில்  பசு என்று இருந்தாலும் இவற்றின் மூதா தையர் யானை என்று கருதப்படுகிறது. நீளம்  4 மீட்டர். உடல் எடை 500 கிலோ. ஆயுட்காலம்  70 ஆண்டுகள். கர்ப்பகாலம் 13 முதல் 15 மாதங்கள். பிரசவித்து முடிந்தால் குட்டிகள் ஒன்றரை  ஆண்டு வரை தாயுடன் வாழும். பிறகு அவை சுதந்திரமாக வாழத்தொடங்குகின்றன. இந்தியாவில் தமிழகத்தில் மன்னார் வளை குடா, குஜராத் கஜ் வளைகுடா, அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் இவை காணப்படு கின்றன. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அதி காரப்பூர்வ விலங்கு இதுவே. இவை தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடு களில் வாழ்கின்றன. கடற்சூழலை பாது காக்கும் விலங்குகளான இவை உணவை உண்ட பிறகு வெளித்தள்ளும் கழிவுகள் மீன்  வளத்தை அதிகரிக்க உதவுகிறது. அழியும் நிலையில் உள்ள இவற்றை பாதுகாக்க நடை முறைப்படுத்தப்படும் இந்த முயற்சிகள் வெற்றிபெறும்போது அது உலகிற்கே ஒரு  சிறந்த முன்மாதிரியாக விளங்கும் என்பதில்  ஐயமில்லை.