states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது “இந்தியா” கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.

ஜார்க்கண்ட் தேர்தலில் “இந்தியா” கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான, சத்தியத்திற்கான  பிரம்மாண்ட வெற்றி ஆகும். “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவளித்து ஜார்க்கண்ட் மக்கள் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஜார்க்கண்டில் பாசிசம் மீண்டும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. இன்னும் காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட 4ஆம் நிலை கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்தப்படவில்லை. வாகன போக்குவரத்தை தடுக்க தில்லி காவல்துறையும், அரசும் தவறிவிட்டது. பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பதும் தடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் இஸ்ரோவினுடைய கருத்து என்ன?

அதானிக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் குறித்து ‘செபி’ விசாரணை தொடங்கி உள்ளது. முதலீட்டாளர்களிடம் குற்றச் சாட்டுகளை மறைத்ததா? என்பது குறித்து 2 வாரத்தில் விசாரித்து பதிலளிக்க பிஎஸ்இ, என்எஸ்இ-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

“வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.  எனக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை உணரச் செய்யும் வகையில் எனது பணிகள் இருக்கும்” என வயநாடு மக்க ளவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலா ண்மை ஆணையத்தை மறுசீரமைப்பு செய்ய  ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்ட நடிகரும், பிரபல பிக்பாஸ் போட்டி யாளரும், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சரு மான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை அடைந் துள்ளார். அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடர்வது கவனிக்கத்தக்கது.

“மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள். அதில்  எவ்வித சர்ச்சையும் இல்லை” என்றும் அம்மாநில  துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவ ருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித் துள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே ஏற்  பட்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரயிலில் இருக்கை தகராறில் சக பயணியை கத்தி யால் குத்தி கொன்ற 16 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

“இலக்கியம் மனிதகுலத்தை மேம்படுத்து கிறது மற்றும் சமூகத்தை மேம்படுத்து கிறது” என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் வெவ்வேறு தலை வர்கள் தலைமையில் ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து பாஜக மாநிலத்தின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கி வருவதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு குற்றம் சாட்டியுள்ளார்.

“மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர் பாராத, புரிந்துகொள்ள முடியாதவை” என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி யுள்ளார்.