பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவின் அலுவலகத்திற்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சிறப்பு ஊதியம் கோரி போராட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஹர்ஜித் கவுர் பன்ஜோலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் பங்கேற்றனர்.