tamilnadu

img

கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி

தஞ்சாவூர், நவ.21 - தஞ்சாவூர் மாவட்டம், பேரா  வூரணி அருகே மல்லிப்பட்டி னம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ரமணி, திருமணம் செய்ய மறுத்ததால், மதன்குமார் என்பவ ரால் புதன்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.  அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வு செய்யப்பட்டு சொந்த ஊரான மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை கொண்டு செல்லப்பட்டது.  அங்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் எம்.பி.முரசொலி, எம்எல்ஏக்கள் நா.அசோக் குமார் (பேராவூரணி), கா. அண்ணா துரை (பட்டுக்கோட்டை)  ஆகி யோர் ரமணியின் உடலுக்கு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தி னர். பின்னர் ஆசிரியை ரமணியின் உடல் தகனம் செய்யப் பட்டது. அதனை தொடர்ந்து மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆசிரியை குடும்பத்தின ருக்கு நிவாரணமாக ரூபாய் 5 லட்சம் அறிவித்தார். வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், ஆசிரியை ரமணி யின் தந்தை முத்து, தாயார் முத்து ராணி ஆகியோரிடம் ரூ.5 லட்சத்திற் கான காசோலையை வழங்கினார். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தின் சார்பில், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்போது அமைச்சரிடம் மனு அளித்தனர்.  அப்போது தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்ட மன்ற உறுப்பினர்கள் பேராவூரணி நா.அசோக்குமார், பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை, மாவட்ட வரு வாய் அலுவலர் தெ.தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் சுகுமார் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம் தேவை

ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டம் தேவை முன்னதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள் ளது. ஆசிரியர்களிடையே கொந்தளிப்பும், அச்ச உணர்வும் ஏற்பட்டுள் ளது. சகிக்க முடியாத இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணமாக இருந்தாலும் பள்ளிக்குள் சென்று ஒரு ஆசிரியரை எளிதாகக் கொலை செய்ய முடியும் என்ற எண்ணம் கொடூரக் குற்றவாளிக்குத் தோன்றியுள்ளது. இதுவே பள்ளிகளில் பாது காப்பற்ற சூழல் உள்ளது என்பதை வெளிப்படையாக உணர்த்துகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே பள்ளிகளில் நடக்கிறது. எனவே, ஆசிரியர்களுக்கான பணிப் பாது காப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதோடு, நிவாரணமாக 25 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.