tamilnadu

img

வரலாற்றைக் காப்பாற்ற ஆய்வுகள் அவசியம்

சென்னை,நவ.21- வரலாற்றை காப்பாற்ற ஆய்வுகள் அவசியம்.ஆகையால் சிந்து சமவெளி ஆய்வு அவசியமானது என்று  தொல்லியல் இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசினார். சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழகத்தில்தான் கிடைத்துள்ளன. 1823 ஆம் ஆண்டில் இருந்து சிந்து சமவெளி கண்டுபிடிப்பை ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் தென்கோடியில் பரவி இருந்தவர்கள் திராவிடர்கள். அதேபோல் வட இந்தியாவில் இருப்பவர்கள் பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் திராவிடர்கள்தான். அவர்களின் மொழி தற்போது மாறிவிட்டது.  ஆய்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நம்முடைய வரலாற்றை காப்பாற்ற வேண்டும். இதற்கு ஆய்வுகள் நமக்கு அவசியமானது. மாணவர்களிடையே அதை எடுத்துச் சொல்ல வேண்டும்.  60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய நபர்களின் மரபணு தமிழர்களிடம் இருந்ததை உறுதி செய்கின்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிடர்கள் கட்டமைக்கிறார்கள். வரலாற்றை காப்பாற்ற சிந்து சமவெளி ஆய்வு அவசியம். கீழடி மட்டுமில்லை தமிழகத்தில் எங்கு அகழாய்வு செய்தாலும் தமிழர்களின் பெருமை, எழுத்து உருவாக்கம் சான்று கிடைக்கும். புராணம், வேதம் என்று பாடப்புத்தகத்தில் இருப்பதற்கான ஆதாரம் இல்லாமல் இருக்கிறது. சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது. அது தாய் மொழி இல்லை. உருவாக்கப்பட்ட மொழி. இவ்வாறு அவர் பேசினார்.