மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வைகை அணை திறப்பு; ஆற்றில் இறங்க தடை
தேனி, அக்.21- வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடப்பட்டு, உபரி நீர் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளி யேற்றப்பட்டு உள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற் பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை, முல்லை பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராகநதி, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக் கான நீர்வரத்து விநாடிக்கு 25ஆயி ரம் கனஅடியாக அதிகரித்தது. ஆகவே கடந்த 18 ஆம் தேதி ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்மட்டம் திங்களன்று 69 அடியாக உயர்ந்தது. இதனால் மூன்றாவது வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு அணையில் உள்ள அபாய சங்கு மூன்று முறை பலமாக ஒலிக்கப்பட்டது. பின்பு பெரிய, சிறிய மதகுகளின் வழியே 5 ஆயிரத்து 635 கனஅடிநீர் வெளி யேற்றப்பட்டது. இதனால் பூங்கா வில் உள்ள தரைப்பாலம் மூழ்கி யது. இப்பகுதியை கடக்க தடை விதிக்கப்பட்டது. மழைநேரம் என்பதால் அலு வலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள னர். நீர்வரத்துக்கு ஏற்ப வெளி யேற்றப்படும் நீரின் அளவும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த கரையோர மக் கள் கவனமுடன் இருக்க அறி வுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது நீர்மட்டம் 69.15 அடி யாகவும் (மொத்த அளவு 71). விநா டிக்கு 3 ஆயிரத்து 630 கனஅடிநீர் வரத்து உள்ளது. கால்வாய் வழியே ஆயிரத்து 280 கனஅடிநீரும், ஆற் றில் 2 ஆயிரத்து 281 கனஅடியும், குடிநீர் திட்டங்களுக்காக 69 கனஅடிநீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன. 58 ஆம் கால்வாயில் நீர் திறப்பதில் தாமதம் அணை நீர்மட்டம் 67அடிக்கு மேல் உயரும் போது 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்காக அணையின் நீர்தேக்க பகுதியின் பக்கவாட்டில் 4 மதகுகள் அமைக் கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இரண்டாம் முறையாக அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்துள்ளது. இருப்பினும் 58 ஆம் கால்வாயில் இதுவரை நீர் திறக்காததால் விவ சாயிகள் கடும் அதிருப்தியில் உள்ள னர். சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவு 126.28 அடியை எட்டி, அணைக்கு வரும் 252.37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 52.55 அடி உயரமுள்ள சண்முகா நதி அணை, 52.50 அடியை எட்டியுள்ளது. அருவிகளில் குளிக்க தடை வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி, கும்பக்கரை, சின்னசுருளி ஆகிய அருவிகளில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
