கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் தனியார் நிறுவனத்தால் தொடரும் அவலம்
உடுமலை, அக். 21- கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குறைந்த ஆட்களை வைத்து பரமரிப்பு பணி களை தனியார் நிறுவனம் செய்வதால், குடிநீர் வீணாகுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி னர். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யமே (TWAD Board) மீண்டும் ஏற்று நடத்தினால் மட்டுமே குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணை யிலிருந்து உடுமலைப்பேட்டை, குடிமங்க லம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியங்க ளுக்கு உட்பட்ட சுமார் 476 குடியிருப்புப் பகுதி களுக்கும், கணியூர், மடத்துக்குளம், சங்கரம நல்லூர், கொமரலிங்கம், தளி ஆகிய ஐந்து பேரூராட்சிகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத் தின் கீழ் தினமும் சுமார் 44 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகி றது. அணையில் போதுமான நீர் இருப்பு இருந் தும், மேற்கண்ட ஊராட்சிப் பகுதிகளில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது பொதுமக்களைத் தினந்தோறும் போராட்டங் களில் ஈடுபட வைத்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதானக் குழாய்கள் பல இடங்க ளில் உடைந்து, பல வருடங்களாகத் தண்ணீர் வீணாகி வருவது அனைவரையும் கவலைய டையச் செய்துள்ளது. இரண்டு வருடங்க ளுக்கு மேலாக இந்தக் குழாய் உடைப்புகள் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின் றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்களிடம் விசாரித்தபோது, “முன்பு குடிநீர் விநியோகம் மற்றும் குழாய் பராமரிப் புப் பணிகளை வாரியத்தின் ஊழியர்களே செய்து வந்தனர். ஆனால், தற்போது அனைத் துப் பணிகளும் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளன. அவர்கள் லாப நோக்குடன் குறைவான எண் ணிக்கையிலான ஊழியர்களை வைத்தே வேலை செய்வதால் தான் குழாய் பராம ரிப்பு மற்றும் விநியோகத்தில் தாமதம் ஏற்ப டுகிறது. இதுவே தற்போது செயற்கையான குடிநீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம்” என்று கூறினர். மக்களின் அடிப்படைத் தேவையான குடி நீர் விநியோகத்தை ஒரு சேவையாகக் கருத வேண்டிய அரசு, இதனைத் தனியார் நிறுவ னங்களுக்கு லாப நோக்குடன் விட்டதுதான் இத்தகைய அவலத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து பொதுமக்களுக்குத் தரப்படும் அனைத்து குடிநீர் விநியோகம் மற்றும் குழாய் பராம ரிப்புப் பணிகளையும் உடனடியாக மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே (TWAD Board) ஏற்று நடத்தினால் மட்டுமே குடி நீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.