போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க நாட்குறிப்புத் தொடர்...
குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் எழுச்சிப் பயணம்
மக்களுக்கு குடிநீர் கொண்டு சேர்ப் பது அரசின் தலையாய கடமை. இந்த கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தொலைதூரக் கிராமங்கள் வரை பாதுகாக் கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) அன்றைய திராவிட முன் னேற்றக் கழக அரசால் உருவாக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வளமான நீர் வளத்தைக் கொண்ட கோவை மாவட்டம் இந்த வாரியத்தின் பணிக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. கோவை மாவட்டத் தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளைக் கருதி, கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகளின் ஒப்பந்தங்களின் மூலம் பரம்பிக்குளம் ஆழி யார், சிறுவாணி, பில்லூர் போன்ற முக்கிய கூட்டு குடிநீர் திட்டங்களை குடிநீர் வடிகால் வாரியமே நிறைவேற்றியது. வாரியம் தொடங்கப்பட்ட போது, சுமார் 6000 தொழிலாளர்கள் குறைந்த சம்பளம் மற்றும் எந்தவொரு சட்டப் பாதுகாப்பும் இன்றிப் பணிபுரிந்தனர். இந்தச் சூழலில், தொழிலாளர்களின் உரிமைகளை நிலை நாட்ட ஒரு சங்கம் தேவைப்பட்டது. இதன் விளைவாக, 1981 ஆம் ஆண்டு கோவை யில் குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் கள் சங்கம் பிறந்தது. இந்த சங்கம் விரைவி லேயே சிஐடியு (CITU) உடன் இணைந் தது. பி. கெம்புராஜ், எம். பாலகுமார், சென்னி யப்பன், விக்டர்கோமஸ் போன்றோர் இச் சங்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங் காற்றினர். சிஐடியு தலைவர் கே. வேணு கோபால் சங்கத்திற்கு வழிகாட்டியாக இருந்து ஊழியர்களின் வழக்குகளுக்குப் பெரிதும் உதவினார். உரிமைகளை வென்றெடுத்த போராட்டப் பாதை சங்கத்தின் முதல் போராட்டம் ஒரு வெற்றி கரமான தொடக்கமாக அமைந்தது. தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒரு தொழில் நிறுவனம்; இதற்கு தொழில்தகராறு சட்டம் பொருந்தும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத் தீர்ப்பை சங்கம் பெற்றது. இதன் அடிப்படையில் வாரியப் பணியாளர்களுக்கு போனஸ் கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதல் ஆண்டே போனஸ் பெற்றபோது, தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு-வின் மீதான நம்பிக்கை உறுதியானது. அதேபோல வாரிய அதிகாரி களின் ஊழல்களை அம்பலப்படுத்தி ஊழ லற்ற நிர்வாகத்திற்காக போராடுகிற சங்க மாகவும் தொழிற்சங்கம் செயல்பட்டு வருவ தாகவும் நீண்ட காலம் இந்த சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த எம்.பால குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தற்காலிக தினக் கூலிகளாகப் பணிபுரிந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான போராட்டம் எழுந் தது. தொழிலாளர் துறை ஆணையரிடம் வழக்குத் தொடுத்து, 480 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்ய வேண் டும் என்ற உத்தரவு பெறப்பட்டது. இதில் திருப்புமுனையாக, நிரந்தரம் செய்ய உத்தர விட்ட அதிகாரியே வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக (MD) பொறுப்பேற்றார். அவரு டைய தலையீட்டின் மூலம் ஒரு வரலாற் றுச் சிறப்புமிக்க (12)3 ஒப்பந்தம் உரு வாக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட தினக்கூலிப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 1981 க்குப் பிறகு தமிழகம் முழுவதும் குடிநீர் திட்டங்கள் விரிவடைந்தபோது, மாநில அளவில் சிஐடியு சங்கங்களை ஒருங் கிணைத்து மாநில சம்மேளனம் உருவா வதற்கு (1989 இல்) அச்சாரமாக அமைந்தது. சம்மேனம் மூலமாக மாநில அளவில் இயக் கங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அச்சாரமாக இருந்தது கோவை மாவட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சங்கத் தின் கோவை மாவட்ட சங்கத்தின் வெள்ளி விழா கடந்த 2005ம் ஆண்டு குடும்ப விழாவாக மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. வேலைநிறுத்தமும் மக்கள் நலனும் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் 20 ஆண்டுகளாக நிறைவேற் றப்படாமல் காலந்தாழ்த்தப்பட்டன. இதன் உச்சமாக, 2024 செப்டம்பர் 9 ஆம் தேதி, கோவை கோட்டத்தில் உள்ள 15 திட்டங்க ளில் பணிபுரியும் 278 ஒப்பந்தத் தொழிலா ளர்களும் (97 நிரந்தரப் பணியாளர்களின் ஆத ரவுடன்) முழுமையாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில், 5 மணி நேரத்திற் குள் ரூ.1000 ஊதிய உயர்வும், ரூ.5000 வரை யிலான போனஸ் தொகையும் உடனடி யாகப் பெறப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத் துள்ளதாக பொதுச் செயலாளர் சரவணன் குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உரிமைப் போராட் டங்களுடன், சங்கம் மக்கள் நலனுக்கான போராட்டங்களிலும் முன்னின்றது. 1998 ஆம் ஆண்டில், வாரியம் பன்னாட்டு நிறுவன மான கென்லேக்கு தினசரி 5 லட்சம் லிட்டர் குடிநீரை விற்க முன்வந்தபோது, சங்கம் தலையிட்டு போராடி, குடிநீரை விற்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தியது. அதே போல், 2000 ஆம் ஆண்டில் சிறுவாணி திட்டப் பராமரிப்பைத் தனியார்மயமாக்கும் கோவை மாநகராட்சியின் முடிவும் சங்கத்தின் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. சூயஸ் ஒரு மாற்றல்ல அது ஏமாற்று கோவை மாவட்டத்தில் மட்டும் 15 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளது. வாரியம் தான் பராமரித்துவருகிறது. கோவைக்கு சூயஸ் என்ற நிறுவனத்தை 24 மணி நேரம் தண் ணீர் வழங்க டெண்டர் விட்டாலும் அந்த சூயஸ் நிறுவனத்திற்கு தண்ணீர் கொடுப் பது குடிநீர் வடிகால் வாரியம் தான். கோவை மாநகராட்சியின் சூயஸ் ஒப்பந்தம். பல் லாண்டு கால அனுபவம் வாய்ந்த வாரி யத்தை புறந்தள்ளி விட்டு அந்நிய நாட்டு கம்பெனிக்கு லாபம் சம்பாதிக்க அன்றைய அதிமுக அரசும் கோவை மாநகராட்சியும் கோவை மக்களுக்கு செய்த துரோகமாகும். சிறுவாணி, பில்லூர் தண்ணீர்தான் கோவை மக்களின் ஆதாரம், சூயஸ் அல்ல... வாரியமே நிரந்தரம் என்கிற போராட்டம் இன்றும் தொடர்ந்து சங்கம் எழுப்பி வருகிறது. 2003 ஆம் ஆண்டில் பில்லூர் 3வது குடி நீர் திட்டத்தை வாரியத்திடமிருந்து பெற்று, பின்னர் தனியார்மயமாக்கியதன் தொடர்ச்சியே தற்போதைய சூயஸ் ஒப்பந் தம் ஆகும். பல்லாண்டு கால அனுபவம் கொண்ட வாரியத்தைப் புறந்தள்ளி, அந்நிய நிறுவனத்திற்கு இத்திட்டத்தை வழங்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று சங்கத் தலைவர்கள் வேதனையை வெளிப் படுத்தினார்கள். குடிநீர் விநியோகத்தில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற சங்கத்தின் அணுகுமுறையின் காரண மாகவே, பொருளாதார இழப்புகளையும் சகித்துக் கொண்டு குடிநீர் சேவையினைப் பாதிப்பின்றித் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற தற்போதைய அரசின் தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறை வேற்றப்படவில்லை என்ற ஏமாற்றம் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பாக ஒரு நல்ல முடிவினை அரசு எடுக்கும் என்று ஊழியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தரமான, மலிவான கட்டணத்தில் குடிநீர் வழங்கும் வாரியத்தையும் அதன் தொழிலா ளர்களையும் பாதுகாப்பது தமிழக மக்க ளின் நலன் சார்ந்த ஒன்று. இந்த நம்பிக் கையை வென்றெடுக்கவே கோவையில் நடைபெறும் சிஐடியு மாநில மாநாடு வழி காட்டுதலை வழங்க இருக்கிறது. ஆயிர மாயிரமாய் திரள்வோம், மாநாட்டின் வழி காட்டுதலோடு, மென்மேலும் முன்னேறு வோம், நாமே வெல்வோம். கட்டுரையாளர் பொதுச்செயலாளர் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம்(TWAD)