tamilnadu

img

தொடர் மழையால் சென்னை, புறநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தொடர் மழையால் சென்னை, புறநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சென்னை,அக்.21- தொடர் மழை காரண மாக சென்னை மற்றும் புற நகரில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு கிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு மாவட் டங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வரு கிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலை யில், செவ்வாய்கிழமை காலை முதல் பரவலாக மித மான மழை பெய்து வரு கிறது. இதனால் தாம்பரம், பல்லாவரம், குரோம் பேட்டை, மீனம்பாக்கம், ஆலந்தூர், வண்டலூர், பெருங்களத்தூர், முடிச்சூர், சிட்லபாக்கம், சேலையூர், பள்ளிக்கரணை, கிளாம் பாக்கம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங் களில் காலை முதல் பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதி களில் வெள்ள நீர் தேங்கி யுள்ளது. குறிப்பாக பல்லாவரத் தில் இருந்து பம்மல் செல்லக் கூடிய கண்டோன்மென்ட் சாலையில், முழங்கால் மேல் மூழ்கும் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் பரித வித்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்களை கீழே  இறங்கி வாகனத்தை தள்ளி யபடி நகர்ந்து செல்கின்ற னர். மேலும், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். அதேபோல், குரோம் பேட்டை பழைய காவல் நிலையம் எதிரே மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும், வேளச்சேரி பிர தான சாலை, முடிச்சூர் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்களத்தூர் புத்தர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி யுள்ளது. சில வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில், தொடர்ந்து மழைக்காலம் எதிர்நோக்கி வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக் கும் மக்கள், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் கனமழை பெய்யும் நேரத்தில் வீடுகளை விட்டு அரசு முகாம்களிலோ அல்லது பாதுகாப்பு இடங்க ளிலோ தங்கிகொள்ள மாநக ராட்சி அலுவலர்கள் அறி வுறுத்தி வருகின்றனர்.