தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; இன்று 10 மாவட்டங்களுக்கு ரெட் - ஆரஞ்சு அலர்ட்
சென்னை, அக். 21- தென்மேற்கு வங்கக்கடல் பகுதி யில் உருவான குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, கனமழை மற்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை களையும் விடுத்துள்ளது. அக். 23 வரை மழை நீடிக்கும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது: “செவ்வாய்க்கிழமை (அக். 21) அன்று காலை 5:30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை யில் நகர்ந்து, புதன்கிழமை (அக்.22) மதியம் தென்மேற்கு மற்றும் அத னை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உண்டு. மேலும், இது வியாழக்கிழமை (அக். 23) அன்று மேற்கு மற்றும் வட மேற்கில் இருந்து தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதி நோக்கி மேலும் வலுவடையவும் வாய்ப்புள் ளது. காற்றழுத்த தாழ்வு தீவிர நிலைக்கு செல்லும் என சொல்ல முடி யும். எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை புதன்கிழமை தான் ஓர ளவுக்கு சரியாக சொல்ல முடியும். இதனிடையே, செவ்வாய்க்கிழ மை தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிந்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் மழை பொழிந்துள்ளது. இத னால் தமிழகத்தில் வடகிழக்கு பரு வமழை தீவிரம் அடைந்துள்ளது. அக்டோபர் 21 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ., பாம்பனில் (15 செ.மீ), மண்டபத்தில் (14 செ.மீ), ஈரோடு மாவட்டத்தில் வரட்டுப்பள்ளத்தில் (13 செ.மீ) என நான்கு இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் மேடவாக்கம் (10 செ.மீ) மற்றும் சோழிங்கநல்லூர் (8 செ.மீ) என 22 இடங்களில் கனமழை பதிவாகி இருக்கிறது. இவ்வாறு தென் மண்டல வானி லை ஆய்வு மைய இயக்குநர் அமுதா கூறினார். 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடலூர், விழுப்புரம், மயிலாடு துறை ஆகிய 3 மாவட்டங்களில், அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை இதனிடையே, இராமநாதபுரம், கடலூர், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட 7 கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புதன் கிழமை (அக். 22) காலை 8.30 மணி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. வானிலை அமைப்புகளின் இயக்கத்தைப் பொறுத்து அக்டோபர் 24 வரை தமிழ்நாட்டில் இதுபோன்ற தீவிர மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு கனமழை காரணமாக, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஏற்கெனவே 120 அடி என்ற முழுக் கொள்ளளவை எட்டியுள் ளது. நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் முதல்கட்டமாக திறந்து விடப்பட்டு உள்ளது.
12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் உத்தரவு
வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணி களை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வா கம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வும் ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் அறிவுறுத்தினார். மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்கான முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதி களையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழையை யொட்டி சென்னையில் மேற் கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடு தல் கவனம் செலுத்துமாறும் அலு வலர்களை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தி னால் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 12 மாவட்டங் களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளை (Monitoring Officers) நிய மித்து, அவர்கள் உடனடியாக அவர வருக்கான மாவட்டங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையை யொட்டி சென்னையில் மேற் கொண்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அலு வலர்களை கேட்டுக்கொண்டார். சென்னை பெருநகரத்தை பொறுத்தவரை பெருநகர சென்னை மாநகராட்சி வாயிலாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்படும் மின் கம்பங்களை சீர் செய்திட நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் மழை தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார். இதற்காக 15 மண்டலங்களுக் கும் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல் கொள்முதலை தொய்வின்றி நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் இக்கூட்டத்தின்போது, நெல் கொள்முதல் சேமிப்பு, நகர்வு மற்றும் அரவை குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். மழை யால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வி ன்றி நடத்திட வேண்டும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். 19.10.2025 அன்று நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக தளர்த்துமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு முன்மொழிவு அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டத்தின் போது உடனிருந்தனர். பள்ளிக் கட்டடங்களை பராமரிக்க உத்தரவு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்ட டங்களை பராமரிக்க ஆசிரியர் களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களின் சுவர்களிலும், அரு கிலும் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற உத்தரவிட்டது. செடிகள் அகற்றப்பட்ட பகுதி யில் நீர் புகாமல் பூச்சு செய்ய அறி வுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் திறந்த வெளி கிணறு, கழிவு நீர் தொட்டி, கூரை புனரமைப்பு, மின் இணைப்பை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை விரைந்து மாவட்டங்களுக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் விபரம் வருமாறு: திருவள்ளூர் - மரு. கே.பி. கார்த்திகேயன்(மேலாண்மை இயக்குநர் எல்காட் நிறுவனம்), காஞ்சிபுரம் கே.எஸ்.கந்தசாமி, (மேலாண்மை இயக்குநர், தாட்கோ), செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்) விழுப்புரம் எஸ்.ஏ. இராமன், (இயக்குநர் தொழிலாளர் நலன்) கடலூர் டி.மோகன் ( இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிம வளம்),மயிலாடுதுறை - கவிதா ராமு, (மேலாண்மை இயக்குநர், கோ ஆப் டெக்ஸ்), திருவாரூர் - டி. ஆனந்த், ஆணையர்(ஆதிதிராவிடர் நலம்). நாகப்பட்டினம் - ஏ.அண்ணாதுரை (மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்), தஞ்சாவூர் - எச். கிருஷ்ணனுன்னி, (தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்), கள்ளக்குறிச்சி - பி. ஸ்ரீ வெங்கட பிரியா (செயலாளர், மாநில தேர்தல் ஆணையம்). அரியலூர் - எம். விஜயலட்சுமி, ஆணையர்(இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி), பெரம்பலூர் - எம். லட்சுமி, (ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம்) சென்னையைப் பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
